காதலையும் கடந்து செல்வீர்

விலைகள் இல்லாமல் இரு பொருட்களை பரிமாறிக்கொள்ளும் வர்த்தகம், காதல்.பரிமாறப்படும் பொருட்கள் இதயங்கள்!ஒரு ஆணிடத்தில் உள்ள பெண்மையும் ,பெண்ணிடத்தில் உள்ள ஆண்மையும் வெளிச்சம் போட்டு காட்டும் ரகசியக் கருவி, காதல்.எனக்கு காதலிக்க தெரியாது,அனால் காதல் தெரியும்!

நம் காதல் ஜெயிக்குமா தோற்குமா என்று இதயத்தில் விவாதம் நடத்தும் நாம் முதலில் எது காதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.காதல் என்பது விரல்களின் தீண்டல் அல்ல,இரு மனங்களின் மௌன உரையாடல்.கொடுங்கற்களால் ஆன கர்வ கோட்டைகளை அன்பினால் உடைத்தெறியும் ஆயுதம்.காதலின் சாதனங்கள் யாதென என் மனதிடம் விண்ணப்பம் போட்டேன் ,அவை மந்திரியிடம் கொடுத்த மனு மாதிரி காற்றில் பறந்தன.சொல்லவோ எழுதவோ முடியாத ஓர் விசித்திர உணர்வு.காதலுக்கு உருவம் இல்லை,உணர்வு மட்டும் தான்!

இந்த 21 ஆம் நூற்றாண்டின் காதலர்கள் காதலிக்கிறார்கள் ,காதலில் மட்டுமே லயிக்கிறார்கள்.காதலிக்காகவோ காதலனுக்காகவோ விரும்பி தோற்கும் அவர்கள் காதலில் தோற்பதை தாங்கிக்கொள்வதில்லை.இதனால் உடைந்து போன இளம் நெஞ்சங்களை ஒட்டவைக்க தான் என் எழுத்துக்கள் இங்கே பிரசுரிக்க படுகின்றன.காதல்,வாழ்க்கையில் ஒரு அங்கம் தான்,அதுவே வாழ்க்கை ஆகாது.வாழ்க்கையின் ஒரு பகுதிக்காக வாழ்க்கையே தொலைத்துவிடாதீர்கள்.காதல் கசப்பு மருந்து என்று சொல்ல நான் நாத்திகன் இல்லை.காதலினால் இலட்சியத்தை மறந்துவிடாதீர்கள் என்று நினைவூட்டுகிறேன்.காதல் உங்கள் கனவுகளுக்கு நீர் ஊற்றட்டும்,அனால் அது உங்கள் லட்சிய வேர்களை அரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.காதல் திரை உங்கள் கண்களை மூடாமல் இருக்கட்டும்.கவலைகள் உங்கள் கால்களை தீண்ட அனுமதி அளிக்காதீர்.மனிதா !கொஞ்ச நேரம் காதல் மயக்கம் களை ,பார்வையை விசாலப்படுத்து.உனக்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட ஆதவனை பார்,எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் பூக்களை நேசி.கவலையினால் உன் நம்பிக்கை நார்கள் துருப்பிடித்து போனதேன்!காதல் சிறையில் கட்டுண்டு கிடைக்கும் மானுட வா !காலம் உன் கை விலங்கை அவிழ்க்க ஆயுத்தமாகிறது .வரலாறு உன் பெயரை வாசிக்க தவம் கிடக்கிறது,அதற்கு முன் நீ கவலைகளை விவாகரத்து செய்தாக வேண்டும்.இந்த வயதில் காதல் போல் ஒன்று வந்து போகலாம் அல்லது காதலே வந்து போகலாம்,அது உன் லட்சியத்திற்கு உரமாகிறதா,உன் உணர்வுகளுக்கு உணவாகிறதா ? என்று ஆராய்ந்து செயல்பாடு.

.சிலர் காதலை கடக்கிறார்கள்,சிலரை காதல் கடத்தி செல்கிறது.ஆணும் பெண்ணும் தான் காதலிக்க வேண்டும் என்று காதலுக்கு இலக்கணம் வகுத்தது யார்?காதலுக்கு நிறங்கள் இல்லை,காதலுக்கு வயது இல்லை,காதலுக்கு பாலினம் இல்லை,காதலுக்கு கண்களும் இல்லை.எல்லோரும் காதலிப்பதில்லை ஆதனால் எல்லோரையும் காதலியுங்கள்(இங்க காதல் என்பது நேசத்தின் குறியீடாகும் ).அனால்அந்த காதல் உங்கள் லட்சிய காற்றை நிறுத்தி விடும் என்றால் நிறுத்திவிடுங்கள்,அக்காதலை.மனிதா!மறுத்து போன காதலை மறந்து போ,போ நம்பிக்கையின் விரல்கள் பிடித்து கொண்டு,லட்சியம் தீபம் நோக்கி!காலம்,கண்ணீர் ,கவலை இவற்றை போல காதலையும் கடந்து செல்வீர்களாக!


சரவண பிரகாஷ்.


  • எழுதியவர் : Saravana Prakash
  • நாள் : 14-Feb-17, 10:48 pm
  • சேர்த்தது : சரவண பிரகாஷ்
  • பார்வை : 344
Close (X)

0 (0)
  

மேலே