திருந்தும் வாய்ப்பையே தராத உரிமையியல் வழக்குகள் தீர்ப்புகள் விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு

21 ஆண்டுகளுக்கு மேல் நடந்த இந்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் விமர்சித்தாலும் தாமதமாக கிடைக்கும் நீதி என்பது அநீதியாகத்தான் கருத முடியும். முதல்வர் அம்மா அவர்கள் மக்கள் மத்தியில் கடவுளாக கருதப்படுகிறார் தற்போது அமரராகியும் விட்டார்..வழக்கை தொடர்ந்தது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் அந்த வழக்கை துரிதமாக பின்தொடர்ந்து வழக்கை முடிக்க வேலை செய்திருப்பார்கள் இருப்பினும் இந்த அளவிற்கு தாமதம்..வேறு உரிமையியல் வழக்கு இதுவே சாதாரண மக்களுக்கு அவர்கள் பிரச்சனைக்கு தொடுக்க பட்டால் இதே போல் தான் தாமதமாகி தாமதமாகி சாட்சிகள் சந்தர்ப்பங்கள் எல்லாம் அழிந்து போய் நீதி கிடைக்க தாமதமாகிறது..மேலும் தவறு செய்வது குற்றம் செய்ததற்கு தண்டனை இவ்வளவு தாமதமாக கிடைத்தால் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை எல்லாம் கேள்விக்குறி...யாருமே இல்லாமல் தனிமையாக வாழ்ந்த அம்மாவை நண்பர்களாக இருந்து சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தவர்களுக்கு நீதி....நீதிபதிகள் நிதிக்கு அதிபதியாகாமல் இருக்கும் வரை நீதி நிலை நாட்டப்படும்..நல்லதே செய் நல்லதே நினை நல்லது நடக்க வில்லையெனினும் தீங்கு நடக்காது


  • எழுதியவர் :
  • நாள் : 17-Feb-17, 1:05 pm
  • சேர்த்தது : Drvr Sathis Kumar
  • பார்வை : 100
Close (X)

0 (0)
  

மேலே