மேழிச் செல்வம்

முற்போக்கு சிந்தனையில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் நாம், ஏனோ நம் பாரம்பரியங்களின் முத்தான கருத்துக்களை மரந்து விடுகின்றோம். மேற்கத்திய நாகரீக மோகம் நம்மை, நமது பாரம்பரிய கலாச்சார சிந்தனைகளை மறக்கடித்து காலபோக்கில் காணமல் போக செய்கின்றது.
இந்த நாகரீக மாற்றத்தினால் நாம் மறந்து போனவையெல்லாம் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்வாழ்வு பொக்கிஷங்கள். அவைகள் விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கூறாமல் தெய்வத்தின் மையத்தில் நம்மிடம் விட்டுச் சென்றனர்.
“நம் முன்னோர் விட்டுச்சென்ற எச்சங்கள்; நமக்கு பொக்கிஷமானது !
நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள்; எம் சந்ததியனருக்கு பொக்கிஷமாகும்..!
என் வாரிசு தான் கேட்குமோ “பொக்கிஷம் எங்கு?” என்று
கூறியதில் ஆயிரம் உண்டு!!!”

கல்வி கற்றுத் தேர்ந்தோம் என்று மார்தட்டிக்கோள்ளும் நமக்கு அது ஒரு மூட நம்பிக்கையாகவே தென்படுகிறது. ஆனால் அவர்கள் சொன்னவற்றில் விஞ்ஞான மறைந்திருப்பதை இங்கே ஒரு சிலரே உணர்கின்றனர். அவர்களைத்தான் ஐயா திரு. TMS, தனது பாடல் ஒன்றில் “நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே நான் என்றும் மாறாத தனி இனமே” எனறு பாடிச் சென்றார் என்றே நான் உணர்கிறேன்.
குழந்தை வளர்ப்பிலிருந்தே இந்த மேற்கத்திய நாகரீகம் தொடரப்படுகிறது. இது நமது அறியாமையில் நம்மீது திணிக்கப்பட்டு, அதன் மூலம் சர்வதேச வியாபார சந்தைக்கு பயன்படுத்தப்படுகிறது. தனது வருங்கால சந்ததியனருக்கு விவசாய விழிப்புணர்வே இல்லாமல், மென்பொருள் தொழில்நுட்பத்தை குறிவைத்தே சவப்பிள்ளைகளாக வளர்த்தப்படும் குழந்தைகளின் நிலையிலிருந்தே விவசாயத்திற்கான அழிவை நம்மை அறியாமல் நாமே செய்து கொண்டிருக்கின்றோம்.

குழந்தைகளுக்கு அந்த விழிப்புணர்வில்லாமல் போன காரணத்தினால் தான், கம்மங்கூழ், கேப்பை கூழ் (ஆரியக் கூழ்), கேல்வரகுக் கூழும் கேவலம் எனவும், துரித உணவகங்களில் உண்ணுவதை பெருமையாக எண்ணி, நம்மை அறியாமல் நாமே அனைத்து வியாதிகளையும் சம்பாரித்து கொள்கிறோம்.

விவசாயம் என்று சொல்லும்போதே அதன் அடிப்படை விஷயமான மாடுகள் தான் நினைவுக்கு வரவேண்டும்- மாடு “ஆ” அதுவே முதல் செல்வம்.
ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அன்றே தமிழன் நிலத்தின் வள ங்களை பிரித்து வகுத்து அதன் பொருட்டு தன் தொழிலை அமைத்தான். அதில் பெரும்பங்கு மருத நிலத்தில் இருந்தது. அது தான் உழுது உண்ணும் வழக்கம். அன்றே மாடுகளை தன் வசப்படுத்தி, அதன் மூலமாக விவசாயத்தை தொடங்கினான் என்பதற்கான சான்று பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியதின் மூலம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

மாடுகளே விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது, மாட்டு சாணமும், கோமியமும் கொண்டு தயாரிக்கப்படும், பஞ்சகாவியம், அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றை இயற்கை உரமாக கொடுத்து பயிர்களை வளர்த்தான் தமிழன். அத்துணை தன்மைகள் கொண்ட நம்மாடின் நிலை இன்று என்னவென்று தெரியுமா?
ஒருசில இனங்கள் அழிவின் விளிம்பிலும், ஒருசில இனங்கள் அழிந்தும்விட்டன! இதற்கான காரணங்கள் எல்லாம் ஒன்று தான், வியாபாரம், ஆம் வெண்மை புரட்சி என்னும் பெயரில் நம்மில் திணிக்கப்பட்ட ஜெர்சி, ஹோல்ஸ்டயின் பிரசின் (HF), பிரவுன் சிவீஸ்(BROWN SWISS), போன்ற மாடுகள். அவைகள் நம் சீதோசன நிலைக்கு சரிவராத இனங்கள் எனறபோதும், மேலை நாடுகளின் மாடுகள் மற்றும் மருத்துவ வியாபாரத்திற்காக இங்கே இறக்குமதி செய்யப்பட்டது. பால் ஆசை காரணமாக நாமும் அதன் பின்விளைவின் விழிப்புணர்வின்றி வளர்த்த தொடங்கி விட்டோம். ஆனால் அந்த மாடுகளோ நம் சீதோசன நிலைகளை தாங்காமல் என்னில் அடங்கா வியாதிகளை பெற்றும் இறந்தும் வந்தன. அப்போது அதற்கான மருந்துகளும் இங்கே விற்கப்பட்டன, இந்த பசுக்களை இங்கே இறக்குமதி செய்ய காரணம் என்ன, நம் நாட்டு பசுக்களின் பால் A2 வகையும், மேலை நாட்டு பசுக்கள் A1 வகை பாலும் தந்துவந்தன. A2 வகை பாலில் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்கரை, கால்சியம் குறைபாடு போன்ற நோய்கள் நம்மை அண்டாமல் எதிர்க்கும், ஆனால் A1 பால் வகையில் இது போன்ற எதிர்ப்பு சக்திகள் இல்லை. A2 வகை பாலை அழித்தால் மேலை நாட்டின் மருத்துவ விநியோகம் இங்கே அதிகமாகும். இது ஒரு சாதரண எடுத்துக்காட்டுதான், இதுபோன்று வெள்ளை சர்க்கரை (அஸ்க்கா சர்க்கரை), , ஓட்ஸ், RO தண்ணீர், பிராய்லர் கோழி என நம்மில் தினிக்கப்பட்டவை அதிகம். ஜெர்சி மாட்டின் பாலில் கரோட்டீன் (CAROTENE) வேதிப்பொருள் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே, இதிலிருந்து சர்க்கரை நோய் வருவதற்காண பெரும் பங்கு இதற்கு உண்டு.

நாட்டு மாடு வகைகள்:

தேசிய விலங்குகள் நல மரபணு ஆதார அமைப்பு (NBAGR) இந்தியாவில் 40 நாட்டுமாட்டு இனங்களை அடையாளப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது, அதில் மூன்று பிரிவுகள் இருக்கின்றது.
1. கறவை ரகங்கள்
2. உழவு ரகங்கள்
3. கறவை மற்றும் உழவு ரகங்கள்
இதில் கறவை ரகங்கள் வட மாநிலங்களிலும், உழவு ரகங்கள் தென் மாநிலங்களிலும், கறவை மற்றும் உழவு ரகங்கள் நடு இந்தியாவிலும் காணப்படுகின்றது.

கறவை ரகம்:

சாஹிவால்
கிர்
ரதி
சிவப்பு சிந்தி

உழவு ரகம்:

காங்கயம்
புளிகுளம்
பர்கூர்
உம்பளாச்சேரி
ஆலம்பாடி.

கறவை மற்றும் உழவு ரகம்:

ஒங்கோல்
தார்ப்பார்க்கர்
டியோனி
காங்கிரேஜ்
இன்னும் பல…

இந்திய எருமை வகைகள்:.

12 வகைகள் கொண்ட எருமைகள்
முறா
சுர்தி
ஜப்ரபாடி
பஹாபவாரி
நாக்பூரி
தொடா
மெஹ்சானா
நில்ரவி

கலாச்சார விளையாட்டும் காளை வளர்ப்பும்:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு (மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டு), ரேக்ளா போன்ற விளையாட்டுகள் கலாச்சார ரீதியாக மட்டுமில்லாமல் இனவிருத்திக்காகவும் நட்த்தப்படுகின்றது. இதனை அறியாமலே சிலர் இது போன்ற விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சற்றே கவலை தருகின்றது.

தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு காங்கயம், புளிகுளம், உம்பளச்சேரி போன்ற காளைளுக்கும்; ரேக்ளா விளையாட்டிற்கு காங்கயம், பர்கூர், உம்பளாசேரி மொட்டை காளைகளும், கர்நாடகத்தில் நடத்தப்படும் கம்பளா போன்ற விளையாட்டு எருமைகளுக்கும் நட்த்தப்படுகின்றது.

இதுபோன்ற விளையாட்டுகளில் வெற்றிபெரும் காளைகள் கோயில் காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த ஊரிலுள்ள பசுக்களின் இனவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. மற்ற காளைகள் உழவுக்கு அனுப்ப படுகிறது. இதனை, அறிந்தே குறிப்பாக இந்த விளையாட்டினை தடை செய்ய PETA, FIAPO போண்ற வெளிநாட்டு அமைப்புகள் முன்வருகின்றன. காளைகள் அழிந்தால் இனவிருத்தி குறைந்து நாட்டு மாடுகள் அழியும். பின் விவசாயம் என்பது கார்ப்பரேட் கைகளில் அகப்படும், ஏன்னெனில் பராமரிப்பு குறைவான நம் நாட்டு மாடுகள் வளர்ப்பை போல் ஒரு சாதாரண விவசாயி, மேலை நாட்டு மாடுகளை வளர்க்க முடியாது. பராமரிப்பும் செலவும் அதிகம் ஆனால் பால் அதிகம் கிடைக்கின்றது என்ற ஓரே மோகத்தில் வளர்க்கின்றனர்.
கோயில் காளை நோக்கமோ குறுநில விவசாயிகள், விதவை பெண்கள், நிலமற்ற விவசாயி (மாடு மட்டும்) போன்றவர்கள் பூச்சிக் காளைகளை வளர்த்த முடியாது, ஆகையால் தான் வலிமையான காளையும், நல்லவிந்தும் பெற இதுபோன்ற விளையாட்டுக்களின் மூலம் கோவில் காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊர் மக்கள் பயன்பெற செய்தனர்.

காளைகளும் மேய்ச்சல் நிலமும்:

குறிப்பாக காங்கயம் காளைகளின் மேய்ச்சல் நிலம்கொரங்காடு எனப்ப்படும். இந்த கொரங்காடு என்பது பல்வேறு நுன்னுயிர்களையும், தாவரங்களயும் கொண்ட மேய்ச்சல்நிலம். உலகிலேயே நீண்டு அகண்ட மேய்ச்சல்நிலத்தை தனிநபர் நிலமாக வைத்திருப்பவன் தமிழன் தான்.

இதற்கு சான்றாக “அறுகங்காட்டை விட்டானும் கெட்டான் ஆன மாட்டை வித்தானும் கெட்டான்” என்ற சொலவடை பன்னாட்டிலும் பகழோளிகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலகளவில் முக்கியமான விவசாய பாரம்பரிய முறைகளில் கொரங்காடும் ஒன்று என சான்று அளித்துள்ளது.

இது போன்று புலியகுளம் மாடுகள் கிடை மாடுகளாய் வளர்க்கப்படுகின்றன, கிடைமாடு முறையில் மாடுகள் தன் கொம்பினாலும், கால்களினாலும் நிலத்தை கீ்றி விடுகின்றன பின் அதன் மீது சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை கழிப்பதினால் அந்த நிலவளம் பெருகி விளைச்சல் அமோகமாகும்.
நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு காளைகளுக்கும் இது போன்று தனி தன்மைகள் உண்டு.

நாட்டு மாட்டின் தனித்தன்மை:

நாட்டின மாடுகள் நம் சீதோசன நிலைக்கு உகந்தவை. தனது வால் மூலம் ஈ, கொசு பொன்றவற்றை விரட்டும் தன்மையுடையது. இதன் மூலம் தேவையற்ற நோய்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் வல்லமை பெற்றது. நாட்டு மாடுகள் எளிதில் நோய்வாய்ப்படாது, அது மட்டுமின்றி இயற்கை மருந்துகளே போதுமானது.

ஆனால் கலப்பின மற்றும் மேலை நாட்டு மாடுகள் எளிதில் நோய்வாய்ப்பட்டு ஆங்கில மருந்துகள் செலுத்தப்படும் நிலை ஏற்படுத்துகிறது. அந்த மருந்துகள் பாலிலும் கலந்து நாம் பரும்போது நாமும் பாதிக்க படுகிறோம். மேலும் மேலைநாட்டு மாடுகளுக்கு கரவைக்காக “ஆக்ஸ்சிடோ சின்” கொடுத்து சுரக்கவைக்கும் பாலை நம் குழந்தைகள் குறிப்பாக பெண்குழந்தைகள் பருகும் போது சிறிய வயதிலேயே பூப்படைகிறார்கள். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டே இது போன்று மலச்சிக்கல், சர்க்கரை, கால்சியம் குறைபாடு என்று எண்ணற்ற நோய்கள் கலப்பின மாடுகளிருந்தும் மேலைநாட்டு மாடு களிலிருந்தும் பரவுகின்றன .

முடிவுரை:

“மேழிச் செல்வம் கோழை படாது” எனும் ஔவையின் வாக்கு, ஈரோடு மாவட்டம் பழையக்கோட்டை எனும் கிராமத்தையும் மற்றும் அந்த பகுதியின் ஜமினையும் போற்றப்படுகின்றது. இந்த ஜமின் அரண்மனையில் இக்கூற்று அமைந்துள்ளது. ஆகவே இதனை மனதில்கொண்டு நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் நம் நாட்டின மாடுகளை அழிவிலிருந்து காத்து அதன் மூலம் நாமும் நோயற்ற வாழ்வை பெறுவோம்.
இக்கட்டுரையை விவசாய பெருமக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன்.

எழுதியவர் : குமரேசன் செல்வராஜ் (17-Feb-17, 6:20 pm)
பார்வை : 779

மேலே