சரித்திரம் படைத்தது தமிழினம்

#சரித்திரம் படைத்தது தமிழினம்!!#

மாணவர்கள் மறித்தும்!
மக்களினங்கள் தெறித்தும்!
போராளிகளின் அறமும்!
காவலர்களின் அராஜகமும்!
தவறிழைத்தது காக்கியினரா...?
அல்லது ஆட்சியினரா...?
வீழ்வதும் தமிழன்!
ஆள்வதும் தமிழன்!
இளைஞன் நினைத்தான்!
நினைத்ததை முடித்தான்!
இளைஞர்களின் எழுச்சிக்காண...
இருவர் இங்கில்லை...!!
கலாமும் கானந்தரும்!
நரேந்திரன்(வி.கா) ஆழச்சொன்னார்!
ஆனால் இங்கே...
நரேந்திரன்(மோடி) ஆழ்கிறார்!!
போராளிகளுக்கு உணவளிக்கவரும்
சாலையை நீயடைத்தாய்!
ஆனால் கடல்தாண்டியும்...
அறவழியினருக்கு அன்னமிட்டனர்..
எம்மின மீனவர்கள்!!
அன்னமிட்ட பாவத்திற்காகவும்...
அடைக்கலமளித்த பெருங்குற்றத்திற்காகவும்...
அடிக்கப்பட்டாய் துன்புறுத்தப்பட்டாய்!!
இலங்கையில் தமிழினமென்பதால்...
அடித்து விரட்டினார்கள்!!
தமிழகத்தில் தமிழினப்பற்றால்
மீண்டும் எழுந்துவிடுவானோ?
என்றஞ்சி அல்லவா...
அடித்து விரட்டுகிறார்கள்!! போராட்டம் செய்வதற்கு...
அனுமதித்தும் அரசே!
அடித்ததும் அரசே!
அப்படி என்றால்..
இதன் சூழ்ச்சியுமென்ன?
வதைச்சட்டம் மிருகத்திற்கா?
அல்ல மானுடருக்கா..?
அரசிற்கே விதிவிலக்கு!!
மாறி பொழிந்தால்...
கழனி சிறக்கும்!!
ஏறு தழுவுதலால்...
காங்கேயம் தலைக்கு!!
காளைகளை அடக்கதுடிக்கும்
எந்தமிழர்களை அடக்கனினைக்காதே!!
அவ்வாரடக்க நினைத்தால்...
அடங்குவது தமிழுர்களள்ள..
தமிழகரசாக இருக்கும்!!
போர்கொடி ஏந்தினோம்!
வெற்றிவாகை சூடினோம்!
தை பத்தொன்பது...!
தழுவுவோம் ஏறு...!!!

- ஜெனிஸ் பீரிஸ்

எழுதியவர் : Jenis Peeris (15-Feb-17, 9:59 am)
சேர்த்தது : jenispeeris16
பார்வை : 2382

மேலே