மலர்களே மலருங்கள்

மலர்ந்தது ஒரு மொட்டு
எனக்காக !!!
என்று!
பல நாள் பார்த்து பார்த்து
சேர்த்து வைத்த ஆசைகளை கொட்டித்தீர்க்க வட்டமிட்டேன்
அதன் வீட்டின் வாசல் முன்
ஒரு வண்டாக !!!
நான் கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்க வில்லை ???
இந்த மொட்டு மலர்ந்து விட்டது என்னை மறந்து விட்டது !!!
அண்டமெல்லாம் சுற்றி திரியும் காக்கைப் போல்
இவள் வண்ண முகம் காணவே தினமும் இவள் முன்னே சுற்றினேன் !!!
பாசம் காட்டி பேசிய
காதல் மலரென்று நினைத்தேன் !!!!!!
உன் பாசத்தின் வாசம் புரியாமலே
உன் மேல் நேசம் வளர்த்தவன்
உன்னையெண்ணி யோசிக்கிறேன் !!!
இந்த மலர் மலர்வதற்காகவே எதையும் சொல்லாமல் மெளனமாய் மறைகிறேன் !!!
மலர்களே மலருங்கள் என்று .
படைப்பு
Ravisrm