பேசுவது சிலையா
உயிர்ப்பெற்று சிற்பி செதுக்கிய
பொற்சிலை ஒன்று நடந்துவந்ததோ
என்று உன்னைப்பார்த்த போது
நினைத்திருந்தேன்
அவள் அருகில் வந்தேன்
அவள் கண்ணில் என்னைப் பார்த்தேன்
அவள் கால் போட்ட வண்ணக்கோலங்கள்
என் மீது நீயும் காதல் கொண்டுளாய்
என்று கூறாமல் கூற
இன்னும் ஏனடி இந்த மௌனம்
என்று வாய்திறந்து நான் கேட்டுவிட
அப்பவும் அவள் மௌனம் கொண்டிருக்க
என்ன இவள் பேசா மடந்தையோ
என்று நான் சிந்தனையில் ஆழ்ந்துநிற்க
எங்கிருந்தோ தெருவை கடக்க
வந்தது ஒரு பச்சிளங் குழந்தை
அவள் முன்னே சிரித்து சிரித்து
விளையாடி வந்தது
அப்போது வேகமாய் வந்த
இரு சக்கர வாகன ஒட்டி
இடிப்பது போல் அக்குழந்தையை
தாண்டி ஓட்டிச்சென்றான்
எதிர்ப் பார்க்க இந்த உரசலில்
குழந்தை கீழே விழுந்து
ஓவென்று அழ தொடங்கியது
என்னவள் என் மௌன மோனிஷா
ஐயோ என்று அலறி ஓடி
தெருவில் விழுந்த குழந்தையை
தன தாமரைக்கு கைகளில்
அள்ளி எடுத்து உச்சி மோர்ந்து
தன மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்
அப்போது எந்தன் பேசா மடந்தை
பேசியதைக் கண்டேன், கேட்டேன்
அவளிடம் ஊற்றாய் பெருகிய
அந்த தாய்மையைக் கண்டேன்
பெண்ணிற்கு தாய்மை உணர்வு
இப்படித்தான் வந்தமையுதோ
என்று எண்ணி எண்ணி
புல்லரித்து போனேன்
என்னவள்,ஊமைக்குயில் அல்ல
தாய்மையை தன்னுள் பூட்டிவைத்த
பாடும் குயில் எந்தன்
பேசும் பொற்சித்திரம் என்று