காதல் பழக வா-10

காதல் பழக வா-10
யாரென்று நினைத்தாய் என்னை
உன் முன் மண்டியிட்டு
கண்கலங்கி யாசகம் கேட்கும்
பாமர பெண் என்றா!!!
நான் பதுங்கி நின்று
பாயும் புலி என்று அறியாது
விளையாடி விட்டாய்
என் கனவுகளோடு!!!
உன்னோடு நான் விளையாடப்போவது
களத்தில் அல்ல உன் காதலோடு
எப்படி என்னை வீழ்த்த போகிறாய்
வேடிக்கை பார்க்க போகிறேன்
உன்னோடு மௌன யுத்தம்
நிகழ்த்திக்கொண்டு நான்!!!

ரமாவின் பிறந்த நாள் விழாவுக்காக ஒட்டு மொத்த நெருங்கிய சொந்தமும் வந்து நிற்க கண்ணனுக்கோ, ரமாவிற்க்கோ எப்படி இதை சமாளிப்பது என்று புரியாமல் திகைத்து நின்றனர்....

many more returns of the day சித்தி.....என்று கோரஸாக ரமாவின் அண்ணன் பிள்ளைகள் வாழ்த்து கூற பாதி சிரிப்பும் மீதி குழப்பமுமாய் என்ன செய்வது என்று புரியாது கண்ணனை கண்களால் வினவ கண்ணனோ ‘நான் பாத்துக்கறேன் பயப்படாதீங்க’ என்று கண்களாலே ஆறுதல் கூறினான்....

அத்தை என்ன இப்படி எந்த கொண்டாட்டமும் இல்லாம சாதாரணமா இருக்கீங்களே, பர்த்டே டிரஸ் கூட போட்டுக்காம இப்படியே நின்னுட்டே இருந்து எங்களை திருப்பி அனுப்ப போறிங்களா, சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வாங்க அத்தை என்று ரமாவின் அண்ணன் மகள் சினுங்க வேறு வழி இல்லாமல் பார்ட்டிக்கு தயாராக தன் அறைக்கு சென்ற அன்னையை எந்த முகபவானையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் பார்த்து கொண்டிருந்தான் கண்ணன்...

அறைக்குள் இருக்கும் ராதி வெளியில் வந்தால் தான் புயலா, பூகம்பமா என்று கூற முடியும், அந்த அளவுக்கு சூழ்நிலை திகிலடைந்து இருந்தது, ஆனால் கண்ணன் இப்படி பட்டவன் அல்ல, எல்லாத்தையும் மோதி பார்த்துவிடலாம் என்ற அசாத்திய தைரியம் கொண்டவன் தான், ஆனால் ராதியின் மனநிலை மட்டும் அவனுக்கு குழப்பமாகவே இருந்தது, இந்நேரம் இதே இடத்தில வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்து இந்நேரம் வீடே ரெண்டாகி இருக்கும், ஆனால் இவள் என்னவென்றால் அம்மா குடுத்த ஜூஸை அமைதியாக குடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்ற பேரில் அறைக்குள் நன்றாக தூங்கி கொண்டிருக்கிறாள்.....

அம்மா கூட அவளை தனியாக விட்டால் விபரீதம் என்று இதோடு பத்து முறையாவது அவள் அறைக்கு சென்று பார்த்து விட்டு வந்துவிட்டால், நன்றாக படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் எந்த சலனமும் இல்லாமல் உறங்கிக்கொண்டிருக்கும் அவளின் மனதை அனுபவம் வாய்ந்த அம்மாவால் கூட கணிக்க முடியவில்லையே...

புயலுக்கு முன் நிலவும் அமைதியா இது, இந்த புயல் எப்பொழுது கரையை கடந்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்த போகிறதோ....கண்ணனுக்கு என்ன தான் கலக்கமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எதுவாக இருந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்....
அம்மா ரெடி ஆகி வர கேக் வெட்டி வாண்டுகள் எல்லாம் கலாட்டா செய்து கத்தி வாழ்த்து கூறி எல்லாம் முடியும் வரையிலும் ராதி வெளியில் வந்து விடுவாளோ என்ற படபடப்பு கண்ணன், ரமா இருவருக்குமே இருந்தது...இந்த உண்மை தெரிந்த அத்தனை பேரும் கொஞ்சம் படபடப்பான மனநிலையில் தான் விழாவை கூட கொண்டாட முடியாமல் தவித்து போய் இருந்தனர்....

"அத்தை இதே நேரத்துல மாமா இருந்திருந்தா இன்னும் எவ்ளோ நல்லா இருந்திருக்கும், மாமா உங்களை பார்க்க நீங்க மாமாவை பார்க்க ஒரே ரொமாண்டிக் ட்ராமா நடந்திருக்கும், ஆனா இந்த வருஷம் நாங்க இதைலாம் மிஸ் பண்ணிட்டோம்...."

"ஏய் வாலு, நாங்களா ரொமான்டிக் டிராமா பண்ணுவோம், இரு இரு உனக்கு வாய் ரொம்ப நீண்டுட்டே போகுது, அடுத்த வருஷத்துக்குள்ள உனக்கு கால் கட்டு போட்டா தான் நீ சரி பட்டு வருவ"

"அத்தை அதெல்லாம் இருக்கட்டும், முதல மாமாவுக்கு கால் கட்டு போடற வழி பாருங்க, நானாவது பேசுற வாலா இருக்கேன், ஆனா மாமா பேசாமலே உங்களை படுத்தறாரே.... அவருக்கு முதல்ல கல்யாணம் ஆனப்புறம் தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்"

"ஏய் நீலு அப்டினா நீ கடைசிவரை கன்னியா தான் நிக்கணும், அண்ணாக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்ல போல இருக்கு, அண்ணாவோட கம்பர் பண்ணின அப்புறம் நீ அம்போ தான்"

"சசி என்ன பேசிட்டு இருக்க, எந்த இடத்துல என்ன பேசணும்னு கொஞ்சமாவது தெரிஞ்சி நடந்துக்கறயா, பாரு அக்கா முகத்தை, எப்படி வாடி போச்சுன்னு, கொஞ்சமாவது அடக்கமா பொண்ணு மாதிரி இருக்க பழகுங்க"

"அப்பா சாரிப்பா, நான் விளையாட்டா தான் சொன்னேன், அத்தை சாரி, உங்களை கஷ்டப்படுத்தற மாதிரி பேசிருந்தா மன்னிச்சிடுங்க அத்தை"

ரமாவோ நடந்து முடிந்ததை பத்தி கவலையோடு இவர்களுக்கு எப்படி புரிய வைக்க போகிறோம் என்று குழம்பி நிற்க மற்றவர்களோ ரமாவின் முக வாட்டத்திற்கு வேறு ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்ல துவங்கினர்....

"அக்கா நீ என்னக்கா சின்ன பிள்ளைங்க பேச்சுக்கலாம் வருத்தப்பட்டுட்டு இருக்க, கண்ணனுக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கும், நீங்க வேணா பாருங்களேன், இந்த வீடே நிறைஞ்சி நிக்கும்"

"ஆமா அண்ணி, கண்ணனுக்கு கல்யாண பிராப்தம் சீக்கிரம் வர போகுது, உங்க கவலையெல்லாம் தீர போகுது"

"ரமா நீ கண்ணனோட ஜாதகத்தை என்கிட்டே குடு, நானே நேரடியா கண்ணனுக்கு பொருத்தமான பொண்ணா பாத்து பேசி முடிக்கறேன்"

"யாரோட ஜாதகம் வேணும், யாருக்கு பொண்ணு பாத்து பேசி முடிக்க போறிங்க"

வீடே கொண்டாட்ட கோலத்தில் இருந்து அமைதியில் புதிதாக வந்த குரலில் மௌனம் சாதிக்க இது தான் வாய்ப்பு என்று உறவினர் கூட்டத்திற்கு மத்தியில் அழகே உருவாக எந்த தடுமாற்றமும், கவலையும் இல்லாமல் தெளிந்த முகத்தோடு வந்து நின்றாள் ராதி...

இதுவரை பார்த்திராத இந்த புது முகம் யாரென்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்து நிற்க ராதியே தன் ஆட்டத்தின் முதல் பகுதியை தொடங்கி வைத்தால்....

“என்ன எல்லாரும் அப்டி பார்க்கறீங்க, நான் யாருனு உங்களுக்கு தெரியலையா??, ஹோ, ஆமால்ல, எங்க கல்யாணத்துக்கு தான் நீங்க யாருமே வரலையே, சோ என்ன தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல, எல்லாரும் எப்போ வந்திங்க, நீங்க வந்ததே தெரியாம அசதில தூங்கிட்டேன், என்ன தப்ப நினைக்காதீங்க,அத்தை நீங்க என்ன எழுப்பிருக்கலாமே, கண்ணன் மாமா நீங்களாவது என்ன எழுப்பிருக்கலாம்ல, அது சரி....ஒரு வருஷமா உருக உருக காதலிச்சு எங்க வீட்ல இருக்கவங்க எதிர்ப்பையும் மீறி இன்னைக்கு தான் என் கழுத்துல தாலி கட்டினீங்க, அதுக்குள்ள பொண்டாட்டி மேல ரொம்ப தான் உங்களுக்கு கரிசனம்......சரி வாங்க மாமா பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்"

அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க ராதியின் இந்த அதிரடி தாக்குதலில் கண்ணனும் எப்படி எல்லாரின் கேள்விகளையும் எதிர்கொள்வது என்று வெலவெலத்து நின்றான்.....ஒரு வேலை ராதி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என்னை இவன் என் விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டான் என்று கூறி இருந்தால் கூட கண்ணனிடம் யாரும் அவ்வளவு எளிதாக கேள்வி கேட்டு விட முடியாது....கண்ணனும் எதாவது கூறி சமாளித்திருப்பான்....ஆனால் இப்பொழுதோ கண்ணன் ராதியின் பெற்றோரிடம் ஆடிய நாடகத்தை கண்ணனின் சொந்தங்களின் முன் திருப்பி அரங்கேற்றி கொண்டிருக்கும் ராதியின் வார்த்தைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்று புரியாமல் கண்ணன் தவித்து நிற்க ராதியின் கண்களில் சதுரங்க விளையாட்டில் முதல் படியில் கண்ணனை வீழ்த்திய திருப்தி மின்னிக்கொண்டிருந்தது.....

எழுதியவர் : இந்திராணி (20-Feb-17, 11:50 am)
பார்வை : 496

மேலே