கேள்விக்கு பதிலில்லை
ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டு இருக்கிறார். ஆசிரியர் பாடத்தை நடத்தி முடித்த பிறகு, அந்த வகுப்பறையில் ஒரு மாணவனை எழுப்பி அந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு அந்த மாணவன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "தெரியவில்லை சார்" என்று கூறினான். ஆசிரியர் மறுபடியும் மாணவனிடம் வேறு கேள்வியை கேட்டார். அதற்கும் அவன் தெரியவில்லை என்று பதில் கூறிவிட்டான்.
ஆசிரியர்: "அப்போது இவ்வளவு நேரம் நான் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது நீ என்ன கவனிதாய்?"
மாணவன்: "நீங்கள் பாடம் நடத்தும் போது உங்களிடம் குறையை கண்டேன்" என்று கூறினான்.
ஆசிரியர்: "நான் பாடம் நடத்துவதில் குறையா, என்ன குறை கண்டாய் என்னிடம்?" என்று கோபமாய் ஆசிரியர் கேட்டார்.
மாணவன்: "நீங்கள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் உங்கள் பாடத்தை கவனிக்கிறார்களா இல்லையா என்று நீங்கள் கண்டுக்கொள்ளவே இல்லை" என்று கூறினான்.
ஆசிரியர்:"இந்த வகுப்பில் மொத்தம் 50 பேர் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் கவனிக்கிறார்களா இல்லையா என்று என்னால் எப்படி பார்க்க முடியும்?" என்று அவர் கூறினார். "
மாணவன்:"இங்கே 50 பேர் இருக்கும் போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும் எப்படி கேள்வி கேட்டிர்கள்" என்று அவரிடம் கூறி அவன் தன் விவாதத்தை ஆரம்பித்தான்.
ஆசிரியர்: "தம்பி!!! உனக்கு பாடம் புரியவில்லை என்பது என் தவறில்லை, அது உன் தவறு. நீதான் நான் நடத்தும் போது ஒழுங்காக கவனித்து இருக்க வேண்டும். பாடம் நடத்துவது தான் என் வேலை, அதை நான் சரியாக தான் செய்தேன்" என்று அவரது குரலை உயர்த்தி கூறினார்.
மாணவன்: "பாடம் நடத்துவது தான் உங்கள் வேலை என்றால் பின்பு ஏன் என்னிடம் கேள்விகளை கேட்டிர்கள். மேலும் நீங்கள் நடத்தும் பாடம் எனக்கு புரியவில்லை என்றால் அது நீங்கள் நடத்தும் விதத்தை குறிக்கிறது."
ஆசிரியர்: "தம்பி நான் எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் பாடம் நடத்துகிறேன், பாடத்தை கவனிதவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்".
மாணவன்: "சார், நீங்கள் அனைவர்க்கும் ஒரே மாதிரி தான் பாடம் நடத்தினீர்கள் என்றால் தேர்வில் அனைவரும் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை தான எடுத்திருக்க வேண்டும். ஏன் ஒவ்வொருவரும் வேறு மாதிரியான மதிப்பெண்களை எடுக்கிறார்கள்?".
மாணவன்: "பாடத்தை நடத்துவது மட்டும் உங்கள் வேலையல்ல அதை மாணவர்களுக்கு புரியவைப்பதும் உங்கள் கடமை என்பதை நீங்கள் உணர வேண்டும்".
மாணவனின் அந்த கேள்விக்கு ஆசிரியரிடம் பதிலில்லை.
இந்த மாணவனின் கேள்விகள் சரியா?