இப்படியும் ஓர் உலகம்

சுந்தரம் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மானேஜர் ஆக வேளையில் சேர்ந்ந்து
படிப்படியாய் முன்னேறி, ஓய்வெடுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீனியர் மேனேஜர் ஆகி
தன வேலையின் உச்ச கட்டத்தை அடைந்தார்; அவர் வருவாயில், மனைவி செண்பகவல்லி
பக்க துணையிலும், சிக்கனத்திலும் , தனக்கென்று ஒரு சிறு குடிலையும் ஒரு கிரௌண்ட் நிலத்தில்
கட்டிக்கொண்டார், தாம்பரம் பக்கத்திலி இருந்த அந்த சென்னை-திருச்சி தேசிய சாலை ஓரம்
அமைந்த சிற்றோரில்.சுந்தரம்-செண்பகவல்லி தம்பதியருக்கு, ஒரு மகள், ஒரு மகன் .இருவரையுமே
பார பட்சம் செய்யாமல், நல்ல பள்ளியிலும், பிறகு கலோரிகளிலும் சேர்த்து தக்க கல்வி
கொடுத்தார்கள்; மூத்தவள் மகள்,அபிநய, பார்ப்பதற்கும் நேர்தியானவள், படிப்பிலும் சுட்டி;
கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பில் முதல் இடம் பெற்று, பீ.ஈ. பட்டம் பெற்றாள்; காம்ப்ஸ்
இன்டெர்வியுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கையேடு, ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் வேலையும்
கிடைத்து, டிக்ரீ கையில் கிடைத்த சில நாட்களிலேயே அமெரிக்கா சென்றுவிட்டாள்.

இது இப்படி இருக்க , சுந்தரம் தம்பதிகளின் இரண்டாவது குழந்தை, அதாவது அவர்கள் அன்பு
மகன், வசந்த், அக்காவைப் போன்றே அழகிலும் சுந்தரன், படிப்பிலும் படு கெட்டி.அவன் தன
சொந்த முயற்சியிலேயே , மிகுந்த மதிப்பெண் எடுத்து, ஐ.ஐ.டீ இல் பீ.ஈ எலெக்ட்ரோனிக்ஸ்
டிகிரி இல் சேர்ந்து, முதல் வகுப்பில் பட்டம் பெற்று,சுவிற்சர்லாந்து இல் ஒரு மிகப்பெரிய
தொழிநுட்ப பல்கலை கழகத்தில் பீ.எச்.டீ படிப்பு மேற்கொள்ள அழைப்பு வர அதை பெற்றோர்கள்
இசைவோடு ஏற்றுக்கொண்டு , சுவிற்சர்லாந்து சென்று விட்டான்.

காலம் நகர்ந்தது; இப்போது,சுந்தரம் தம்பதியர், தங்கள் இரு மக்களுக்கும் திருமணம் செய்து முடித்து
தங்கள் பெற்றவர் கடமையை இனிதே முடிவு செய்து , வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்
தங்கள் நாட்களை இனிதே கழித்தவந்தனர்; இருமுறை, வசந்த், அபிநய இவர்கள் வசித்து வரும்
சுவிற்சர்லாந்து, அமெரிக்கா சென்று வந்தனர்; வசந்தம், அபிநயாவும் இரண்டு மூன்று
வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வந்து சென்றனர்.

காலம் இப்போது வேகமாய் நகர்ந்தது; மூப்பு வந்து சுந்தரம் தம்பதியரைத் தாக்க அவர்கள்
சற்றே நிலைகுலைந்து போக, சொந்த வீட்டை விற்றுவிட்டு வந்த பணத்தை வைத்துக்கொண்டு
ஒரு வசதியுள்ள முதியோர் விடுதியில் சேர்ந்து மிச்ச வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்தனர்.
அப்போதுதான் அந்த எதிர்பார்க்காத சிக்கல் ஏற்பட்டது; தன்னை கேட்காமல் அப்பா வீட்டை
விற்று முதியோர் இல்லம் சேர்ந்தது பிள்ளை வசந்துக்கு பிடிக்கவில்லை.மணக்க கசப்பு
துவங்கியது; அவன் மூன்று வருடத்திற்கு ஒரு முறை வருவதையும் நிறுத்திக் கொண்டான்.
அக்கா, அபிநய, தன இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், உத்தியோக விஷயமாய்
சதா வெளியூர் செல்லும் புருஷனால் அவன் மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளையும், வீட்டு
வேளையிலும், மற்றும் தன சொந்த அலுவலக வேளையிலும் செலுத்திக் கொண்டிருக்க, தன
பெற்றோர்களை கண்டுகொள்ளாதது போல் இருந்து விட்டாள்.

இவற்றால், முதலில் , அதிர்ச்சி அடைந்த சுந்தரம்-செண்பகவல்லி தம்பதிகள் , போகப் போக
மனதை திடப்படுத்திக்கொண்டு, சுதாரிச்சுக்கொண்டு, தங்கள் முதியோர் இல்லத்திலேயே
நாட்களை கழித்துக்கொண்டிருந்தனர்; தங்களுக்கென்று சில நியமங்கள் வைத்துக்கொண்டிருந்தனர்;
காலையில் வாக்கிங் ,பின் குளித்து விட்டு பூஜை முடித்துக்கொண்டு, உணவருந்தியபின் 'நூலகம்
செல்லுதல், படித்தால்; மாலையில் சில பக்கத்து கிராம பசங்களுக்கு எஸ்.ரோஸ் , இரவில்
லைட்டாக உணவருந்தி உறங்குதல் என்று.

இன்னும் சில வருடங்கள் இவ்வாறு ஓடிஏ, ஒரு நாள் சுந்தரம் இயற்க்கை எய்தினார்.வசந்தம் அபிநயாவும்
வந்தனர்; சடங்குகள் எல்லாம் முடிந்தபின்னர், அவரவர் ஊர் திரும்பிவிட்டனர்.
இப்போது செண்பகவல்லியைத் தனிமை தாக்கியது.

ஒரு நாள் சுவிற்சர்லாந்து இல் வசிக்கும் வசந்துக்கு ஒரு எஸ்.ஓ.எஸ் செய்தி வந்து சேர்ந்தது அதில்
அவன் தாய் செண்பகவல்லி அவனைத் தன்னுடன் இரண்டு வாரமாவது தன படங்களுடன் வந்து
தங்குமாறும், தன்னை தனிமை வாட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.வசந்த்,தன்னால் அந்த
வருடம் முழுவதும் வருவதற்கு இயலாது என்றும் , உதவிக்கு பணம் தேவை என்றால் அனுப்பி
வைப்பதாகவும் பதில் கொடுத்து விட்டான். இதை அறிந்த செண்பகவல்லி,மௌனத்திலேயே தன
மனா அவதியை வெளிப்படுத்தினால்; பெண் அபிநயா, தானும் வர இயலாது என்று இங்கிதமாய்
தெரிவிக்க , அது வெந்த புண்ணில் எறிந்த வேல் போல் செண்பகம் நெஞ்சில் பாய்ந்தது.

நெஞ்சில் வந்து தாக்கிய அதிர்ச்சியில் செண்பகம் படுக்கையோடு படுக்கையானாள்
இதை முதியோர் இல்லது வார்டன், வசந்துக்கு தெரிவிக்க அவன் அங்கு வர தனக்கு இயலாது
என்றும், பணம் அனுப்புவாதாகவும் அதில் உடம்பை தேர்த்திக்கொள்ளவும் தெரிவித்தான்

அதற்க்கு வார்டன் அவனுக்கு தெரிவித்தார், செண்பகவல்லி அவனிடம் எதிர்பார்ப்பது அன்பு
ஒன்றேதான் என்றும் , அவன் தந்தை அவளுக்கு போகும்வரை இருக்க வசதி செய்து கொடுத்துதான்
சென்றார் என்றும் தெரிவித்தார்.

இது நடந்து சில வாரங்களிலேயே செண்பகவல்லி உத்தியோர் இல்லத்திலேயே தன்னுடன்
இருந்த நண்பர்கள் சூழ்ந்திருக்க , ராமா பஜன் மெல்லியாதாய் ஒலித்துக்கொண்டிருக்கள்க
அமைதியாய் உயிர் நீத்தார்.அவர் எழுதிவைத்த உயில் படி, அவர் உடல் உடனே பக்கத்துக்கு
பெரிய ஹாஸ்பிடலுக்கு தானமாக அளிக்கப் பட்டது; அவர் இன்று ஒருவருக்கு இருதயம் தந்தும்,
ஒருவர் கண்ணும் பெற்று வாழ்ந்துவருகிறார்கள்.

விஷயமறிந்துவந்த வசந்த் முதியோர் இல்லம் வந்து அந்திம க்ரியா செய்ய வந்தான்;அப்போது அங்கு
அவனால் அவன் தாயின் உடலைக்கூட காண முடியவில்லை ; அதுதான் முந்தையநாள் ஹாஸ்பிடலுக்கு
அளிக்கப்பட்டு விட்டதே; செண்பகவல்லி இன்று ஒருவர் இதயத்திலும் மற்றோருவர் கண்களிலும்
இருப்பதாயும் அவர்களை சென்று மனசாந்தி அடைய ஹாஸ்பிடல் செல்லுங்கள் என்று முதியோர்
இல்லத்தில் வசனத்தை அனுப்பி வைத்துவிட்டனர்.
அவன் இப்போது ஒன்றும் செய்ய இயலாது சிலைபோல் ஆனான்.
அவன் தாய் அவன் தோளை இப்போது மெல்ல வருடுவதுபோல் ஓர் உணர்ச்சி; அவன் தாய் இப்போதும்
வசந்த் கவலைப்படாதே; நீயும் உன் குடும்பமும் எல்லாம் பெற்று சுகமாக வாழ்க; நீ ஒரு போதும் உன்
குழந்தைக்கு பாரமாகிவிடாதே என்று சொன்னதுபோல் இருந்தது;

சற்று நேரத்தில் அவன் அக்கா, அபிநயாவும் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தாள்
அவளுக்கும் அதே கதி; தாயின் உடலைக்கூட காணமுடியவில்லை.

இருவரும் அங்கு கண்ணீர்விட்டு அழுது புலம்பினார்.
அந்த கணீர் யாரை நனைக்கும் ...............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-17, 3:40 pm)
Tanglish : ippadiyum or ulakam
பார்வை : 436

மேலே