நாளைய இளைஞன்

கருணையெனும் தாயின் மடியில் அவதரித்த மன்னனே
காத்திட வருவாயோ நாளைய உலகை.,

கண் இமைக்கும் நேரம் கால சக்கரம் உன்னை சுழற்றி கொண்டு தான் போகும்..,
எதிர்த்து நில் எதையும் கண் கலங்காமல்.,

உன்னை எவரேனும் தூற்றி விட்டு போகட்டும்..,
உன்னை நீ நம்பு உலகம் மாற்ற உதித்தவன் நீ..

சில்லறைக்காக போராடும் நீ , சிரிக்க மறந்தாய் உனக்காக..,

அன்றாடம் கருவிகள் உன்னை ஆட்கொள்ள..,
அரவணைக்க எழுவாயோ இதிகாசங்களை.,

ஆசைகள் மறந்த புத்தனாகி போனகாதே.,
ஆதரிக்க நீ வேண்டும் அனாதை உயிர்களுக்கு..,

இன்னல் படும் இறைவிகளுக்கு அண்ணனாகி போயேன்
அன்பென்ற காற்று அனுதினமும் தொழுதிட்டு போகும்..

உணவிட்ட உழவன் உயிர் துறக்க நினைத்தால்
தாவி சென்று தடுத்துவிடு உன்னால் முடிந்த உதவியினால்.,

உன்னை இகழ்ந்தால் அமைதியாகு.. உன் இன உரிமையை தொட்டால் .,
துளைத்து விடு தயங்காமல்..

கருவேல மரம் காவல் காக்கட்டும் உன் அழகிய தோட்டத்தை மட்டும்..
மா, பலா, வாழை விதைத்திட்டு மகிழ் விவேகமாய்..

தூர்வார கற்றுக்கொள்..,
தூய வான் மாதா நமக்காய் தரும் மழை நீரை சேகரிக்க.,

நாள்தோறும் உன்னை புதுப்பித்துக்கொள் நானிலம் போற்றும் நாளைய இளைஞனாய்...
நல்ல இளைஞனாய்...

நன்றிகளோடு வணக்கமும்
தாடி இல்லா கேடி கவிஞன்

பா. சுரேந்தர்

எழுதியவர் : தாடி இல்லா கேடி கவிஞன் (20-Feb-17, 7:21 pm)
Tanglish : naalaiya ilaignan
பார்வை : 1268

மேலே