மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு

நமது மனதிலும், மனையிலும் வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்...

நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், *பொண்டாட்டி* என்றும்...

நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், *பொஞ்சாதி* என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...

வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், *வீட்டுக்காரி* என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...

நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...

நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...

இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...

கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...

வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...

காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்...

சொல்கிறார்கள் என்பது எமது கருத்து...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (22-Feb-17, 11:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1068

சிறந்த நகைச்சுவைகள்

மேலே