கருகும் காமம்...

உன் தலையணையடியில்-
யாருமறியாமல் மறைத்திருக்கும்,
உன் மீதான....
என் கவிதைகளை...
கிழித்துவிடு...
கூட்டிய கிளர்ச்சியின் சுருதிகளால்...
மூட்டிய தீ நாவுகள்-
தீண்டிய உச்சத்தில் உண்டாகும்..
உன் சுவாசத்தின் உஷ்ணத்தில்...
பற்றி எரிய நேரிட்டால்...
எரிந்த புகையின் நெடியில்,
என் காதலை நொடியில்....
கருகும் காமம்-
அறிந்துவிடக்கூடும்...