ஆடி போகட்டும்

ஆடி போகட்டும்!
வர வர வீட்டுவேலை செய்ய கஷ்ட்டமா இருக்குங்க,
என்றார் அம்மா!
அப்பா உங்க மாப்பிள்ளைக்கு, புதிய பிஸ்னஸ் தொடங்க பணம் வேணுமாம்,
என்றால் அக்கா!
அப்பா கடைக்கு வேண்டியதை, வெளியில் பர்ச்சஸ் பண்ண போனால்,
கடையில் பொறுப்பாய் இருந்து கவனிக்க, நம்பிக்கையான ஆள் வேணும்,
இது அண்ணா!
இத்தனைக்கும் அப்பா கொடுத்த, ஒரே பதில், ஆடி போகட்டும்!
ஆடி போனது, ஆவணி வந்தது, அண்ணி வந்தாள்,
அண்ணன் போட்ட மூன்று முடிச்சுக்கு!
அனைவரின் தேவையும் பூர்த்தியானது,
மருமகளால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (1-Mar-17, 8:56 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : aadi pogattum
பார்வை : 56

மேலே