புளியந் தோப்பில் ஒரு நாள்
புரண்டுப் படுத்தேன் புரியாத நிலையில
தூக்கமும் வரலே துவண்டுப் போனேன்
நேத்து நடந்ததை நினச்சுப் பாத்தேன்
காத்துல மிதந்தேன் கனவல்ல நிசமே ..
புளியந் தோப்புப் பக்கம் போனவன்
தெகச்சுப் போனேன் வார்த்தை வரலே
சுள்ளிப் பொறுக்க வந்தவளைக் கண்டு
மயங்கி நின்னேன் அவளழகை ரசிச்சு ...
மயிலா அசைஞ்சா மங்கை அவளோ
மனமோ துடிச்சுது பேசிட நினைச்சிது
தயங்கிய என்னை நெருங்கி வந்தாள்
சிரிச்சாலும் எனக்கு சிலித்துப் போச்சு ...
கேட்டால் தாரேன் வேணுமானு கேட்டா
புளியம் பழம்தான் விலைக்கு என்றாள்
நினைச்சது ஒன்னு நடந்தது வேறாச்சு ...
பழனி குமார்