வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டங்கள் எதற்கு
வீழ்த்திடவா ...
வழியில்லை வாழ்வதற்கு பூமியில்
புதைந்திடவா ...
கற்றவன் சுற்றுகிறான் வேலைத்தேடி
வெட்டியாக ...
பெற்றவன் புலம்புகிறான் நாளுமிங்கு
வழியின்றி ...

கல்விக்கோ மதிப்பில்லை மண்ணில்
வருந்துகிறேன் ...
கல்விச் சாலைகளோ சந்தையானது
சாடுகிறேன் ...
கொட்டிக் கிடப்பவன் பெட்டியுடன்
திரிகிறான் ...
வறுமையில் உள்ளவன் தவிக்கிறான்
​கொடுமையிது ​ ...

அதிகாரம் படைத்தவன் சந்தடியின்றி
பெறுகிறான் ...
ஆட்பலம் கொண்டவனோ மிரட்டியே
வாங்குகிறான் ...
​நடுத்தரமோ விலைபேசிட அலையுது
வீதியிலே ...
பள்ளிகளில் நுழைந்திடவே நிகழ்கின்ற
காட்சியிது ...

வயல்வெளியோ சமவெளியாகி எழுகிறது
மாளிகைகள் ...
உழுதுப் பிழைத்தவனோ அழுகின்றான்
மடிகின்றான் ...
ஆலைகளையும் தொழிற் சாலைகளையும்
மூடுகின்றான் ...
வேலையிலா நிலையிங்கு பெருகுகிறது
நாடெங்கும் ..

திணறிடும் குடும்பங்கள் அல்லாடுது
தள்ளாடுது ...
பட்டதாரி ஆனவர்க்கும் வழியில்லை
மாடு மேய்க்கலாம் ...

ஆனால் இன்று மாடுகளுக்கே வழியில்லை
வாழ்ந்திட ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Mar-17, 7:59 am)
பார்வை : 241

மேலே