மலர்கள்
மலர்களே உன் இதழ்கள் விரிந்த அளவுகூட
மனிதனின் மனம் விரியவில்லை !
உன் மனம் வீசும் தூரம்கூட
மனிதன் மகிழ்ச்சியுடன் கடப்பதில்லை!
உன் மகரந்தம் தாங்கும் வலிகள் கூட
மனிதனின் மனம் தாங்குவதில்லை!
உன் வேர்கள் செய்யும் உதவி கூட
பிறர்க்கு மனிதன் செய்வதில்லை!
வண்டுகளிடம் நீ காட்டும் அன்பு கூட
பிறரிடம் மனிதன் காட்டுவதில்லை!