முடியாதது

பிரிந்து கிடந்தாலும்
பிரிக்க முடியாதது உறவுகள்!
மறந்து சென்றாலும்
மறக்க முடியாதது நினைவுகள்!
பறந்து சென்றாலும்
பறிக்க முடியாதது பாசங்கள்!
வெறுத்து சென்றாலும்
வெறுக்க முடியாதது நேசங்கள்!
விலகி சென்றாலும்
சுருக்க முடியாதது சந்தோசங்கள்!
சேர்த்து இருந்தாலும்
சேர்க்க முடியாதது சந்தர்ப்பங்கள்!
மறிக்க நேர்ந்தாலும்
மாறாதது மகிழ்ச்சிகள்!
சோர்ந்து போனாலும்
நேர்ந்து விடாதது துன்பங்கள்!
உடல் மறைந்து போனாலும்
உயிர் பிரிந்து சென்றாலும்
காண்பது கடவுளடா!

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (3-Mar-17, 10:47 am)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : mudiyathathu
பார்வை : 90

மேலே