காதல் காத்திரு பகுதி 11

அஞ்சலி: யாரு கதிர்..

சித்தார்த்: சித்தார்த் பேசுறான் மா.... உன்கிட்ட பேசனுமாம்..

அஞ்சலி போனை வாங்கி பேசுகிறாள்... சித்தார்த் சினியுடன் பக்கத்து அறைக்கு சென்றுவிட்டான்...
அஞ்சலி: ஹலோ.... கதிர்....

கதிர்: யாழினி.. எப்டி இருக்க யாழினி.. நல்லா இருக்கியா..

அஞ்சலிக்கு பேச்சு வரவில்லை.. அழுகிறாள்.... திணறுகிறாள்...

கதிர்: ஏன் அழுகுறடா.. பேசுடா... இப்பவாச்சும் என் லவ் வ புரிஞ்சிக்கோடா... யாழினி ஐ லவ் யூ டா...

அஞ்சலி பேச ஆரம்பிப்பதற்குள் சித்தார்த் அறைக்குள் வருகிறான்...

கதிர்: யாழிமா.. என்ன புடிக்லயா.... இதுக்குமேல என்கிட்ட கொடுக்க எதும் இல்லடா...

அஞ்சலி: உடனடியா போனை கட் செய்துவிட்டு பேசுகிறாள் டேய் சித்தார்த் நீ ஆடுன ஆட்டமெல்லாம் முடிய போகுது.... கதிர் என்கூட தான் இருக்கான் இனி நாங்க ஜெயிப்போம்டா..
என்று போனை வைத்துவிட்டு.. சித்தார்த்தை நோக்குகிறாள்..

அ்ஞ்சலி: கதிர்....

சித்தார்த்: எதையோ பார்த்துவிட்டு லேசாக திரும்பி பார்க்கிறான்.. என்னயா கூப்ட

அஞ்சலி: உன் பேரு தான கதிர்..

சித்தார்த்: ஆமாமா... அதுல என்ன டவுட்டு..

அஞ்சலியின் அப்பாவிடம் அனுமதி கேட்டு சினி அவள் வீட்டிலேயே தங்குகிறாள்.

சித்தார்த் வெளியே கிளம்புகிறான்.

கதிரை அவனது நண்பன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

நண்பன்: மச்சா... விடுடா...

கதிர்: இவ்ளோ தூரம் நேசிச்சும் என்ன அவ புரிஞ்சிக்கலடா

நண்பன்: மச்சி நீ ரெஸ்ட் எடுக்கணும்டா... குளுக்கோஸ் வேற ஏத்தணும்..

கதிர்: இல்லடா.... அவ என்ன புரிஞ்சிக்கல..

நண்பன் 1: சரி சரி தூங்கு,,.. காலைல பேசிக்கலாம்..

நண்பன் 2: டேய்.. நம்ம கதிரா இப்படி.....

நண்பன் 1: எப்படி இருந்தவன்... அவன் ஒரு பொண்ணுக்காக இப்டி ஆவானு

நண்பன் 2: காதலிக்க ஆரம்பிச்சிட்டான்ல... இனி தன்னால திருந்திடுவான்...

நண்பன் 3: எத்தன பொண்ணுங்கள அலைய விட்டான்... இவனுக்கு இப்படி ஒரு நிலம...

நண்பன் 1: டேய்.. மூடினு போ.. உன்ன யாரு இங்க வரசொன்னது.... கதிர் பத்தி உனக்கு என்ன தெரியும்...

அவங்க அப்பா யாருனு தெரியுமா? இப்போ இவன கொல்ல முயற்சி பண்ணது யாரு தெரியுமா?

எழுதியவர் : அ.உதயகுமார் (4-Mar-17, 4:53 pm)
பார்வை : 62

மேலே