காதல் காத்திரு 12

இரண்டு வருடங்களுக்குப் பிறகு..

கதிர்: ஹலோ அஞ்சலி....

அஞ்சலி: சொல்லுடா.. எங்க இருக்க..

கதிர்: மீட் பண்லாமா

அஞ்சலி: நானே கேட்கலாம்னு இருந்தேன்... உன்கி்ட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்..

கதிர்: ம்... மெரினாதான...

அஞ்சலி: ;)

கதிர்: சியு சூன்....ஆம் வெரி எக்ஸைட்டிங்...

அஞ்சலி: நா சொல்ல போற விசயம் உனக்கு பேட் நியூுஸ்தான்

கதிர் அழைப்பைத் துண்டித்துவிட்டான்....

அஞ்சலி தனது ஸ்கூட்டியில் வேகமாக மெரினாவை அடைந்தாள்....

கதிருடனான தனது நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சென்றாள்..
திடீரென ஒரு நினைவு.... தனது ஸ்கூட்டியில் சில நாட்களுக்கு முன் வைத்த ஒரு கடிதம் நினைவுக்கு வருகிறது..

மெரினாவை அடைந்தாள் அஞ்சலி...

கதிர் கடிதத்தில்.....

... மை டியர் அஞ்சலி.... டியர் என்பதற்கான பொருளை நான் இன்றளவும் மீறவில்லை... நான் உன்னை காதலிப்பது குற்றமெனக் கருதினாலும் கூட பரவாயில்லை... நான் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வேன்... இந்த இரண்டு வருட காலம் நான் உனக்கு கொடுத்த தொல்லைகள் போதும். காதல் பொருளைக் கொண்டோ அழகைக் கொண்டோ வராது என்பதில் அதீத நம்பிக்கைக் கொண்டவன் நான். என் பொருள் குறித்தோ அழகு குறித்தோ இன்று வரை நீ கேட்டதும் இல்லை... என் மேல் நம்பிக்கை கொண்டு எல்லாவற்றையும் பகிர்ந்தாய் எனினும் நீ எல்லையற்ற நம்பிக்கை கொள்ளும் காதலனாய் இருக்க வாய்ப்பளிக்கவில்லை என்பதில் என் மனம் மின்சார வேலியில் கை வைத்த பன்றியைப் போல துடிக்கிறது.

எனக்கு வேறு வழி தெரியவில்லை... என்றாவது ஒரு நாள் உன்னிடம் என்மீது காதலை எதிர்பார்த்திருந்தேன்.... இனி வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை..... நான் பிரிகிறேன்...
இனி உன் வாட்ஸ்அப் உரையாடல்களில் என் பெயர் இருக்காது...
முகநூல் கவிதைகளை நீ அநாசியமாக பின்தொடர தேவையிருக்காது...
பத்தோடொன்று பதினொன்றாக யாரோ ஒருவரைப் போல....நான் எங்கோ இருக்கிறேன்...இருப்பேன்....

உன் வாழ்வை நீயாகவே வாழ்.....

.................................கதை முற்றும்.............................

எழுதியவர் : அ.உதயகுமார் (4-Mar-17, 4:54 pm)
பார்வை : 89

மேலே