காதல் காத்திரு பகுதி 13
அஞ்சலி கதிருக்கு கால் செய்கிறாள்..
அஞ்சலி: ஹலோ... மென்டல் லூசு பயலே..
உதய் : டேய்...டேய்.... பொறு பொறு ஏன்டா....
அஞ்சலி: எரும மாடு... உனக்குலாம் கத எழுத யாருடா சொல்லிக்கொடுத்தா.... கத எழுதுறான் கத....
உதய் ஏன்மா...
அஞ்சலி: கதய ஏன்டா முடிச்சிட்ட.. பன்னாட...
உதய் :இல்ல அது வந்து.....
அஞ்சலி: ஒரு பேச்சிக்கு என்ன ஹீரோயினா வச்சி கத எழுத சொன்னா நீ என்னடான்னா என் லைப்யே வச்சி கத எழுதுற... அதுல ஒரு வில்லன்,,,. அவன் என்ன கடத்துறான் ... நீ அவன கொல்லுறனுலாம் பீலா விட்டுனு கெடக்க...
உதய்: சரி...இரு இரு நா எங்க இந்த கதையோட ஹீரோயின் நீனு சொன்னே.. நீயே யோசிச்சிக்குற.. விட்டா நான்தான் கதிர் னு சொல்ல போற
அஞ்சலி :இல்லைனு சொல்வியா நீயி
உதய் :மௌனம்
அஞ்சலி டேய் பணியாரம்.. ஒழுங்கா இப்ப கதைய சொல்றயா இல்ல.... நேரா கெளம்பி வரட்டா...
ஏன்டா நல்லாத்தான போய்ட்ருந்து கத.... சரி வில்லன் ஏன் அஞ்சலிய கடத்துனான்...
ஏன் கதிர் அவள வேணாம்னு சொன்னான்?
இவ ஏன் அவன ஏத்துக்கல?
சித்தார்த் ஏன் கொன்னதா சொன்னான்?
சித்தார்த் ஏன் அகேன் வந்தான்?
ஒரு எழவும் பிரில...
உதய்: எனக்கு ஓகே சொல்லு ... மீதி கதய சொல்றேன்...
அஞ்சலி: நீ சொல்லவே வேணா போ
உதய்: இரு இரு அதான் இரண்டு வருடத்துக்கு பிறகு னு போட்றுக்கேன்ல
அஞ்சலி: சரி அந்த இரண்டு வருடத்துல என்னதான் நடந்துச்சி...
உதய் : சொல்றேன் சொல்றேன்.....
இந்த கதையோட 11 வது எபிசோடு வரைக்கும் நினைவு இருக்கா...
அஞ்சலி: ஓ இருக்கே....
உதய்: கதிர் அஞ்சலிய டீப் பா லவ் பண்றான்...... ஆனா அஞ்சலிக்கு ஏதோ சிக்கல்... அவ வெளிப்படையா சொல்ல மாட்றா... என்னால உன்ன லவ் பண்ண முடியாது மட்டும் சொல்லிட்டா..
சரக்கே அடிக்காத கதிர் அன்னிக்கு ராத்ரி செம்ம டைட்டு... அஞ்சலி மேல உள்ள காதல் அவன் பொழம்புறான் பிரெண்ட்ஸ் கிட்ட....
கதிர்: அஞ்சலி... அஞ்சலி... சித்தார்த் காகத்தான என்ன வெறுக்குற...அவன்தான் உன்ன விட்டு போய்ட்டானே...
ரகு : டேய் இவன் மெண்டல் ஆய்ட்டான்டா..
கதிர்: ஹா ஹா ஹா... காதல் ஒரு கவிதாஆஆஆய்
ரகு: டேய் டேய் எத போயி எதுக்கூட கம்பேர் பண்ற... புதுசா குடிச்சா அப்டித்தான்.. மூடிட்டு படுடா..
கதிர்: நா இப்பவே அஞ்சலிய பாக்கணும்...
கதிர்: அப்படியே கிளம்பி போகிறான்... அவனுக்கு ஒரு கால் வருகிறது...
கதிர்: ஹலோ....
மறுமுனை ஹலோ பங்காளி... அஞ்சலி உயிரோட வேணும்னா உடனே மீனம்பாக்கம் பென்னி மில்லுக்கு வா
கதிர்: டேய் சித்தார்த் சித்தார்த்
அழைப்பு துண்டிக்கப்படுகிறது...