மலரின் மணம்
உயிரே
மலரோடு மலராக
உன்னை ஒருநாள் கண்டேன்!
மலரோடு மலராக கண்ட நொடியில்
உன்னை எண்ணிக்கொண்டு
என்னை மறந்து நின்றேன்!!,
மலராக இருந்த உன்னை
என் மனதால் ஓருமுறை
தொடுக்க நினைத்தேன்!!
ஆனால்
தொடுக்கும் முன்னே நீ
மலர்ந்து விட்டாய்!!,
தொடுக்கும் முன் மலர்ந்த உன்னை
என் மனவானில்
ஒருமுறை மணக்க நினைத்தேன்!
ஆனால் நீ
அதற்கு முன் மணந்து விட்டாய்!,
நான் நினைத்த மலரின் மணமாக
இல்லை
உன்னை நினைத்த மணமகனின்
மணமாக...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!