ஜல்லிக்கட்டு

திமில் கொண்ட காளைகளை
திமிர் கொண்டு அடக்கிடும்
கன்னியரின் கரம்பற்ற
காளையோடு மல்லுக்கட்டும்
இளங்காளையர் கூட்டமம்மா,

போராளியின் ஆரவாரம்
பேராழியையும் மிஞ்சுமம்மா,
மதம்பிடித்த யானையும்
மண்டியிட்டு கெஞ்சுமம்மா,
மனம் தொலைத்த மங்கையரும்
மடிதந்து கொஞ்சுவாரம்மா,

சிங்கங்கங்கள் கர்ஜினையில்
சிறுநரிகள் மண்டியிட்டு
வழி இன்று விட்டதம்மா,
தடையினை உடைத்ததம்மா
தடம்பதித்து நிலைத்ததம்மா,.......

எழுதியவர் : ஜல்லிக்கட்டு (4-Mar-17, 5:24 pm)
பார்வை : 3271

மேலே