தாய் நாடு இல்லா ஈழ்த்தின் குமுறல்

தாய் நாடு இல்லாத குமுறல்

நமை ஈன்ற தாய்
நகக்கு எவ்வளவு முக்கியமோ
அதுபோல் தாய் நாடு
தாயை விட ஒரு படி மேலானவை...!

ஆனால் நாங்கள் தாய் நாடு
இருந்தும் சொந்த நாட்டில் அகதியானோம்
எங்களுக்கான உரிைமைகளை கேட்டால்
நாங்கள் தேசவிருதேகள்....
அன்று விடுதலைக்காய் போராடி
விரோதிகளால் வீதியோரங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டோம்...!

உரிமைக்காய் உயிரை இழந்த நாங்கள்
இப்போது உடமைகளை இழந்துகொண்டு
இருக்கின்றோம் புத்தர் அமைதியை
போதித்த நாட்டில் புத்தி கெட்ட காவிகளால் அடக்கப்படுகின்றோம்.!

பெயருக்குத்தான் நாங்கள் இலங்கையர்
ஆனாலும் ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் தமிழர்கள் நாங்கள்.....
சொந்த நாட்டில் உரிமைகளை பெருவதற்கு பெரும் தூயரங்கள் அடைகின்றோம்.....!

உரிமைகளையும் மறுக்கிறான்
உடமைகளையும் அபகரிக்கின்றான்
படித்த படிப்பிட்கும் வேலை கிடைக்கிறமாதிரியில்லை
அதிலும் போராடடம் எங்கும் போராட்டம்
எதிலும் போராட்டம்...!

அன்று உலகையே கட்டி ஆண்ட
இதே தமிழன்தான் இன்றும் போராடியே
சாகிறான் தமிழன் என்றால் வீரன் என்று
போற்றியவன் இன்று கோழை என்று பச்சை குத்துகின்றான் ...

எப்போது எங்கள் உரிமைகளை பெற்று
உடமைகளோடும் சதந்திரத்தோடும்
விடியலை நோக்கி எமது மக்கள் பயணிக்கின்றனரோ அன்றுதான் எங்களுக்கு எங்கள் நாடு தாய்நாடாகும்
அதுவரைக்கும் நாங்கள் அகதிகள்தான்..!

எழுதியவர் : kupenthiran (5-Mar-17, 10:35 am)
சேர்த்தது : kupenthiran 309
பார்வை : 76

மேலே