நண்பன்
தொட்டதெல்லாம் தொல்லையானாலும்
தொலைத்ததெல்லாம் கவலையானாலும்
பட்டதெல்லாம் கஷ்டமானாலும்
கண்டதெல்லாம் காதலனாலும்
கரம் கொடுப்பது நண்பனடா!
வருவதெல்லாம் துன்பமானாலும்
நண்பன் தருவதெல்லாம் இன்பமடா
உன் வார்த்தை தேனடா
உன் பிரிவால் தவித்தேனடா
பிஞ்சு முதல் பிரியாதவன்
நெஞ்சடைக்க அழுகிறேன்
பஞ்சு போல் பறந்து வா
கெஞ்சிக்கேட்கிறேன் நம் பிஞ்சு நட்பால்!
தீயோர் நட்பால் தீமை செய்கிறாய்
தடுக்க முயன்றால் விலகி செல்கிறாய்
கடும்சொற்களால் கண்டிப்பதும்
தேன் சொற்களால் கெடுப்பதும் தான் உலகமடா!
எச்சரிக்கும் என்னை எடுத்தெறிவதேனடா
சித்தரித்து உன்னை சிலையாக வைப்பேன்
என்றும் எச்சரித்து நிற்ப்பேன் நீ எதிர்த்தால் கூட!
கனம் கொண்டு போனாய்
மனம் திருந்தி வருவாய்
என் கண்ணீர் துடைக்க
ஆயிரம் கரமானாலும்
நண்பன் கரம் படுமானால்
கண்ணீர் தொலைவதென்ன மாயம்
மறைவதென்ன என் காயம்!
நாம் இணைந்தால்
இமயம் நம் கையில்
எதிர்ப்பது எரிமலையானாலும்
அதை அணைக்கும் பனிமலை நண்பனடா!