வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் !..
============

காலை எழுந்தவுடன் “வாட்ஸ் அப்பு” - பின்பு
கணிணியில் விளையாடும்வெட்டி “விளையாட்டு”

மாலை முழுதும் வெறும் “சாட்டு”..!
அதனாலே பொழுதெல்லாம் “வேஸ்டு”..!

வாட்ஸ்அப்பே பொழுது”போக்கு”..அதிலே
நாட்பொழுதை வீணாக்குமுன் “நோக்கு”!

குட்மார்னிங் சொல்ல ஒரு “குரூப்பு”..!
பதில்சொல்லலேன்னா வரும் “பொல்லாப்பு”..!

ஆளாளுக்கு வைத்தியம் சொல்வாங்க..
அப்பப்ப அறிவுரையும் சொல்வாங்க..!

எதையும் கேட்டொழுகியவர் என்றெவருமில்லை..!
பயனடைந்தேனென்று ஆரும் சொன்னதில்லை..!

வந்ததையே திரும்பத்திரும்ப அனுப்பிவைத்து..!
வெந்தபுண்ணில் வேலைப் பாச்சும் தொழிலாக..

சொந்தமா எழுதியதின்னு எதுவுமில்லீங்க..!
சுயமா சிந்திச்சதா சரித்திரமில்லங்க..!

பாடுபட்டு எழுதினவன் பேறழிச்சு..
பட்டவர்த்தனக் காப்பியடிச்சு..பேர்வாங்கும்..

பொய்யாமொழிப் புலவருண்டு..அதில்
பொய்புரட்டு வதந்தியும் அதிகமுண்டு..!

நல்லதகவலுன்னு நாற்பதுவரி எழுதி அனுப்பினா
“நன்றி” சொல்லாம “வணக்கம்” சொல்லுவர்பலர்!

வழுக்கைக்கு தைலம் கேன்ஸருக்கு மருந்தென..
வதந்தியால் மகிழும் மூடர்களின் கூட்டமென..

வேலைக்கு ஆளெடுப்பதாகச் சொல்லி..
வேலையில்லாத வீணர்களின் தகவலால்..

வம்பிழுக்கும் வேலையைக் கூட..
வளமாகச் செய்கிறது வாட்ஸ் அப்..!

அருகே இருக்கும் குன்றைப் படமெடுத்து,,
ஆஞ்சனேயர் தூக்கிய சஞ்சீவி என்றும்,,!

கழுத்தறுக்கும் காட்சி கவர்ச்சிப்படமென..
கயமையின்சாட்சியாக அனுதினமும்அரங்கேறும்..!

நாளும் தொடரும் “இக்கூத்து”,,!
நம் தூக்கத்து க்கும்வக்கிது “வேட்டு”..!

வம்புசாமாச்சாரெமெல்லாம் அனுப்பிவிட்டு..
வாழ்க்கையிழந்த வாலிபர்கள் ஏராளம்..!

எல்லாம் போச்சு எல்லாம் “போச்சு”..!
இக்காலமெல்லாம் “மாறிப்போச்சு”..!

உலகம் ரொம்ப கெட்டுப்போச்சுன்னு..
புலம்புவதே தொழிலாப் போச்சு..!

வாட்ஸ் அப்பில் வருகின்றசில தகவலெலாம்..!
வளராமல் தடுக்குதுங்கநம் மூளையெலாம்..!

எதச்சொன்னாலும் பொல்லாப்பு “வருது”..!
இதச்சொல்லாட்டிலும் நம்மதிப்பு “கெடுது”..!

செல்லக் குழந்தைகளோடு படும்பாடு “பெரும்பாடு” - என்று
சொல்ல வந்தநம் பெரியோர் கையிலும் “ஐபேடு”..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Mar-17, 3:05 pm)
பார்வை : 250

மேலே