நிலையற்ற வாழ்வு

உதவிக்காய் உன் முன்னே பலமாந்தர் வருகின்றார்
ஊழ்வினையை நினைந்துருகி கையேந்தி நிற்கின்றார்
நிலையில்லா தெம்வாழ்வு நிலைப்பதல்ல பெரும்செல்வம்
பணம்பதவி புகழ்யாவும் பாதிவழி சென்றுவிடும்

மண்ணுலகில் பிறந்துவிட்டால் மறையும்நாள் என்றும்வரும்
நற்செயல்கள் புரிவதில்தான் நம்வாழ்வில் சிறப்புவரும்
இறைதந்த செல்வத்தில் இரப்போர்க்கும் கொடுத்திடுங்கள்
ஏழையின் துயர்துடைக்க எல்லோரும் எழுந்திடுங்கள்

இரப்போர்க்கும் வாழ்வினிலே இல்லாது இருப்போர்க்கும்
உதவி செய்யும் எண்ணத்தை உள்ளத்தில் விதைத்திடுவோம்
மண்ணுலகில் உள்ளவரை மற்றவர்க்காய் வாழ்ந்திடுவோம்
வையத்தில் இருக்கும்வரை வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்

ஆக்கம்
அஷ்ரப் அலி


  • எழுதியவர் : alaali
  • நாள் : 15-Mar-17, 4:25 pm
  • சேர்த்தது : அஷ்றப் அலி
  • பார்வை : 435
Close (X)

0 (0)
  

மேலே