வறுமை
ஏழையின் கண்ணீர்,
கொடுமையின் உச்சம்,
துயரத்தின் துடிப்பு,
காரணம்,
நீ மக்களை அடைந்ததால்
கண்ணீரின் வழித்தடம்,
கனவுகளின் மூழ்கம்,
இலட்சியத்தின் பூட்டு,
காரணம்,
உனது சக்தி ஓங்கியதால்
உன்னால்,
வாழ்க்கையில் வெறுப்பு,
வயிற்றில் பசி,
மகிழ்ச்சியின் மறைவு
வேண்டாம் என்று
எங்கே சென்றாலும்
துரத்தி வரும் பேய்
எய்ட்ஸைக் காட்டிலும்
கொடிய நோயாக திகழ்கிறாய் நீ....
உனக்கு மருந்து
எங்கே கண்டுபடிப்பது?
உன்னால்
ஏழைகளுக்கு கிடைக்கும் பரிசு
"மரணம்" ஒன்றே.