காதல் ஆழம்
கவிழும் கண்ணுள் - என்
காதல் மயக்கம்!
போர்த்திய பிறகு - அவள்
புன்னகை முழக்கம்!
நேற்றய கனவில் - காட்சி
நேர்ந்தது போல
புன்னகை விரித்தாள் - என்
புவியை ஆள!
அழகு நடையோ - அது
மயிலை மிஞ்சும்!
ஔியின் விழியோ - அதை
சூரியன் கெஞ்சும்!
என்னை உருக்கு - நீதான்
எனக்குள் மிச்சம்!
உன்னை உருக்கினால் - நான்தான்
உனக்குள் மிச்சம்!
ஆழப் பொருளாய் - நம்
அன்பு இருக்கையில்
காதல் இதுயென - உலகம்
கண்டு வியக்கவே!
பூமி ஒருபுறம் - இருளில்
புரண்டு படுக்கையில்
காதல் விளக்குகள் - உலகை
ஆண்டு நிற்க்கவே!
ஆயிரம் ஜோடிகள் - உலகை
ஆண்டு போயினும்
நம்மை போல - ஜோடி
அழிவ தில்லையே!
உந்தன் நிழலை - நீ
உற்று நோக்கு
எந்தன் உருவம் - அதில்
தெரிவது சத்தியம்!
இரவின் அழகை - தாங்கிய
விண்மீன் கூட்டம்
நிலவை மறந்து - ஒருநாள்
நகர்ந்து போகும்!
உன்னை என்னை - இந்த
உலகம் மறந்தால்
உலகக் காதல் - அன்றே
இறந்து போகும்!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
