நீ நீயாய் இரு

கண்ணகியாய் இருக்காதே!
காணாமல் போவாய்
சீதையாய் இருக்காதே!
சிதையில் விழுவாய்
பாஞ்சாலியாய் இருக்காதே!
துகிலுரியப் படுவாய்
புயலாய் இரு!
புறமுதுகிட்டு ஓடுவர்
கனலாய் இரு!
காலில் விழுவர்
நீ நீயாய் இரு!
உலகமே திரும்பும்!

எழுதியவர் : லட்சுமி (19-Mar-17, 12:33 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1412

மேலே