மகன்

தெய்வ உருவம் வீட்டின் முன்பு
உள்ளே அழைக்க இல்லை தெம்பு
உள்ளே அழைத்தால் கொண்டவள் கோபம் கொள்வாள்
கொண்டவள் கோபமா
என் தாயே
உன் மகனாக நான் பிறந்தது என் பாவமா

தயக்கம் வாட்டி எடுக்க
வருத்தம் வந்து நிற்க
தாயோ வாசலில் வாடி நிற்க
அழைக்க முடியாமல்
மகன் ஊமையாகி நிற்க

வார்த்தைகளால் விபரிக்க முடியாத தெய்வத்தை
வா என அழைக்க முடியாமல் நிற்கிறான்

கோடைக்கால இடி போல கதறலும்
அதன் மழை போல கண்ணீரும்
ஆறு போல வெல்லமும்
செல்வதை கண்ட தாய்
ரத்தினம் அல்லவா என் தாய்
ரத்த கண்ணீர் வடித்தாள்

கண்ணீரும் ஆறும் கலக்க
அன்பு என்னும் அணைக்கட்டி
அழுகையோட உள்ளே அழைக்க
ஆவேசத்தோடு மனைவி நிற்க
பயம் அறியாத அன்பின்
பலம் கொண்டு
மங்கையின் மனம் மாறி
கூடி வாழ்ந்தால் போற்றி பாடுது ஊர்

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (19-Mar-17, 2:43 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : magan
பார்வை : 7033

மேலே