மனப்போக்கு
மனப்போக்கை மாற்று
மலை உச்சிக்கே போகலாம்
குணபோக்கை மாற்று
கும்பிடும் தெய்வமும் துணையாகும்
கண் போக்கை மாற்று
காண்பதெல்லாம் நன்மையாகும்
கைப்போக்கை மாற்று
ஒவ்வொரு எழுத்துக்கும் மதிப்பெண் உண்டு
கால்போக்கை மாற்று
நீ நடக்கும் பாதையெல்லாம் பூவாகும்
வாய்போக்கை மாற்று
உண்பது நஞ்சானாலும் மருந்தாகும்
சான்றோர் பேச்சை கேட்டுப்பார்
அறிவின் நூலகமாவாய்
முயன்றோர் வரலாற்றை திரட்டிப்பார்
கணக்கில்லை பட்ட கஷ்டம் என்பார்
பயிச்சி செய்தோரை கேட்டுப்பார்
தோல்வியின் அடைக்கலமாவார்
பயிற்சியாளனை கேட்டுப்பார்
முயற்சி ஒன்றே மூச்சி என்பார்

