உயிர்

கவிதையில் கற்பனை மட்டும் இல்லை
கவிதைக்கு கண்கள் உண்டு
அவை கவினனின் கண்களுக்கு மட்டும் தெரியும்
அநியாயத்தை கண்டால் அவை சிவக்கிறது

கவிதைக்கு மனசு உண்டு
மக்களின் கஷ்ட்டத்தை கண்டு
பேனா மையாக அது உருகுகிறது

கவிதைக்கு தோள்கள் உண்டு
மக்களின் சிரமத்தை
எழுத்துக்களால் அவை தாங்குகிறது

கவிதைக்கு செவி உண்டு
தீயோர் சொல் கேட்டு
வார்த்தைகளால் எச்சரிக்கிறது

கவிதைக்கு வாய் உண்டு
பேச தேவையில்லை
கவிஞ்சனின் எழுத்துக்களால்
அவை பேசுகிறது

கவிதைக்கு உயிர் உண்டு
காற்று தேவையில்லை
உயிர் வாழ்ந்திட
வாசகனின் ஆர்வம் போதும்

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (19-Mar-17, 3:15 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : uyir
பார்வை : 92

மேலே