அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரட்டினக்கால் .. தோரணை.. தோரணை

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..


படம் : சத்தம் போடாதே!
எழுதியவர் : நா. முத்துக்குமார்

எழுதியவர் : (22-Mar-17, 12:08 pm)
Tanglish : alagu kutti chellam
பார்வை : 571

மேலே