காதலும் பூக்களும்
கனவு மெய்த்தது காதல் வந்தது
கற்பனைக்கு இங்கே கால்கள் முலைத்தது
மலர்களோ... எனது மெளனம் கலைத்தது
மண்ணின் சிரிப்பு மலரென்றானதோ - இல்லை
மங்கையின் புன்னகை பூக்களாய் பூத்ததோ
தும்பி மலர்களில் தேனை பருகுதோ - இல்லை
தான் தொலைத்த காதலை பூக்களில் தேடுதோ
மலர்களின் வாசம் வண்டை இழுக்கவோ - இல்லை
என் மைவிழியாலின் கொண்டையில் ஏறவோ
பூவுக்கு முட்கள் தேவைதானோ
பூவையே... உனக்கு கோபம் ஏனோ
காலையில் மலர்கள் மலருவதேனோ
கதிரவன் மீது காதல் தானோ
மாலையில் நீயும் உதிருவதேனோ
உன் மன்னவன் மறையும் துக்கத்தில் தானோ
காதலின் சின்னம் பூக்கள் என்றால்
காதலி நீயோ பூந்தோட்டமல்லவோ
பூக்களைத் தாலாட்ட பூங்காற்று வேண்டுமோ
பூவிழியாளுக்கு என் பாக்கள் போதுமோ