கவிதை எழுதி அனுப்பிடல் வேண்டும் இவ்வாறு

தென்றலுக்குள் ஒரு கவிதையை எழுதி அனுப்பிடல் வேண்டும்
அது உன் "இதழ்களை "மட்டும் தீண்டும் பட்சத்தில் !

மழைக்குள் ஒரு கவிதை எழுதி அனுப்பிடல் வேண்டும்
அது உன் "தேகம்" மட்டும் தீண்டும் பட்சத்தில் !

கதிர் ஒளியில் ஒரு கவிதை எழுதி அனுப்பிடல் வேண்டும்
அது உன் " ஆடைகளை " தீண்டும் பட்சத்தில் !

தரை வழி ஒரு கவிதை எழுதி அனுப்பிடல் வேண்டும்
அது உன்" பாதங்களை " தீண்டும் பட்சத்தில்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (22-Mar-17, 8:05 pm)
பார்வை : 140

மேலே