மரணத்தின் டையறி

குட்டியூண்டு
வானத்தை நீ
காதலென பெயரிட்டு
தந்திருந்தாய்!
முத்தங்களால்
நட்சத்திரங்களை
வரைந்துகொண்டேன்
பூக்களின் காம்புகளில்
நிலவு
முளைத்திருக்கையில்!
நீ என்விரல்களை
உன் இமைகளில்
உரசிக்கொண்டிருந்தாய்
அழுவாய்
பின் அணைப்பாய்
சினுங்குவாய்
பின் சிரிப்பாய்!
என் வானம் அடிக்கடி
காலநிலை மாற்றம்
காணும்
அந்த இரவுகளில்
வலிக்குள்ளும்
என்னை நினைவில்
வரவுவைத்தாய்!
நீ என் வானின்
முதல் மழையென
நினைவுகொண்டேன்
இருந்தும்
இல்லாதிருப்பதாய்
நீ மறைந்து கொன்டாய்
தூசுபடிந்த வானில்
நட்சத்திரங்களை
இப்போதெல்லாம்
வரைவதேயில்லை நான்
மரணத்தின் டையறில்
வானம் மீதமிருக்கிறது
வா நீ
நிலவுகள் பூக்கட்டும்