மெட்ரோ இரயில்

முதன் முதலாக இன்று மெட்ரோ ரயிலில் பயணித்த பொழுது...

அட !
என்ன வேகம்...

மின்காந்த சக்தியினால் கிழித்துக் கொண்டு
. மிடுக்கான வேகத்தில் பாயும் மெட்ரோ !
பொன்னான நேரத்தைக் காக்க நல்ல
. போக்குவரத் தேயிந்த புதிய மெட்ரோ !
நின்றிடவும் இடந்தந்து சொகுசு வேண்டில்
. நீட்டியமர்ந் திடவிருக்கை நல்கும் மெட்ரோ !
என்னகுறை மெட்ரோவில் விலைது வங்கி
. எல்லாமே அதிகமிது தமிழர் மெட்ரோ !

திருக்குறளின் பொன்மொழியை வண்ண வண்ணத்
. தினுசான பலகைகளில் பதித்த மெட்ரோ !
இரப்பவர்கள் வியாபாரி நடமாட் டங்கள்
. இல்லாத ரயில்பயணம் இந்த மெட்ரோ !
அரசியரோ ஆண்டியரோ காசி ருந்தால்
. அனைவரையும் சமமாக மதிக்கும் மெட்ரோ !
பெருகிவரும் வேகத்தின் காலம் தன்னில்
. பெருவரமாய் வந்ததிது சென்னை மெட்ரோ !

செலவழிக்கும் நேரமது சிலநே ரந்தான்
. செல்கின்ற தூரமதோ பலதூ ரந்தான்
உலகத்து நாடுகளின் தரத்தில் எங்கள்
. உயர்தமிழர் ஆக்கிவைத்த ரயில்மின் னல்கள் !
தலைநகரில் சிலவிடத்தில் மட்டும் கிட்டும்
. தாராளச் சேவையிது மெட்ரோ திட்டம் !
பலவுரைகள் பேசுவதில் பயனொன் றில்லை
. பார்க்கவொரு முறையேனும் செல்வோம் நாமே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:05 am)
Tanglish : metro irayil
பார்வை : 38

மேலே