கிராமத்து காதல்
….கிராமத்து காதல்….
ஊறார் கண்ணில் படாமல்
பொட்டல் காட்டு சந்திப்பு………!!
வேர்வையும் –சகதியுமாய்
பார்த்து பழகிய முகங்கள்..!!
தூய்மை காற்று……. வெட்ட வெளி……
கீச்சிடும் பறவைகள்….. வேப்ப மரத்தடி…..
இந்த சுகம் போதாது என
உடன் காதலி………………
ஆத்தங்கரை ஓரம்
முட்டி அளவு நீரில் நின்று
விளையாடி கொண்டிருக்களாம்….
வயக்காட்டு வரப்பு மேல்
அமர்ந்து ஒருவர் மீது ஒருவர்
சாய்ந்து பல கதைகள் பேசலாம்…..
மண்வாசம் மாறா மழையில்
துனையை அனைத்த படி
இங்கேயே சொர்கம் காணலாம்….
காதல் வந்த மோகத்தில்
ஆட்டு குட்டி முதல் பூனை குட்டி வரை
கொஞ்சி தீர்க்கலாம்………..
நகரத்து நவீன கலாச்சாரமும் இல்லை……..
ஆடம்பர செலவும் இல்லை…….
விலை உயர்ந்த பரிசும் இல்லை……
காதல் - காதல் மட்டும்....!!
பெறுமையாக சொல் கிராமத்தான் என்று…………….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
