ஒரு கோடி நன்றிகள்
என் சந்தோஷத்திற்காக
அனைத்தையும் விட்டு கொடுக்கும்
குடும்பத்திற்கு நன்றி……………
என் சேட்டைகள் தாங்கும்
இனிய நட்புக்கு நன்றி……..
என் குறும்பு தனத்தை
சகித்து கொள்ளும்
தொழிகளுக்கு நன்றி……….
எப்போதும் இனிக்கும்
தமிழுக்கு நன்றி….
கவலை மறக்க செய்யும்
இசைக்கு நன்றி………
என்னையும் எழுதவைத்த
கவிதைக்கு நன்றி……….
நித்தம் அன்பால் சாகடிக்கும்
காதலுக்கு நன்றி………
தொட்டு தொட்டு தூங்க வைக்கும்
காற்றுக்கு நன்றி……..
கனவில் ஆசை தீர்த்து வைக்கும்
இரவுக்கு நன்றி……..
கண்கள் மூடி கரைய வைக்கும்
மழைக்கு நன்றி……….
தினமும் காலை துயில் களைக்கும்
வெயிலுக்கு நன்றி…………..
ஆரோக்கிய வாழ்வு தந்த
உணவுக்கு நன்றி…………
இருக்கோ இல்லையோ
கடவுளுக்கு நன்றி………
நேரம் செலவிட்டு படித்த
உங்களுக்கும் ஒரு கோடி நன்றிகள்……