சொல்லாமல் சென்ற உனது காதல் - சகி

அன்பே ......
நீயும் நானும்
வெவ்வேறு கிராமம்
என்றபோதிலும்
நீ என்னை தொடராத
நாளில்லை .....
மாலைப்பொழுது
என்னைக்கான நானிறங்கும்
பேருந்து நிலையத்தில்
உனதுக்காதலை சொல்ல
காத்திருப்பதை சொல்லும்
உனது அன்பை .....
வீடுவரை வருவாய்....
காதலை சொல்லாமலே
சென்றாய் ....
உன் விழிகளில்
காதலும் ......
உனது பார்வையில்
ஒருவித தவிப்பும் ....
உனது இதயத்தில்
பரிதவிப்பும் .......
உணராமல் நானில்லை .....
காதலை சொல்லாமலே
சென்றாய் ......
உனது விழிகளில்
உணர்தேன் உண்மைக்காதலை ...........
நீ வாங்கிய
மலர்கள் என்கூந்தலை
சேராமல் வாடின
தினம் தினம் ........
வாடியது மலர்கள்
மட்டுமல்ல ......
என்னை சுமந்த
உன்னிதயமும்
உன்காதலை சொல்லிய
விழிகளும் தான் .......
சொல்லாத காதலின்
வலிகளை உன்னிதயம்
சுமக்கிறது .......
என்னை சுமந்ததாய்
அதையெண்ணி என்னிதயம்
வலிக்கிறது .....
.
இன்று வேறுதிசையில்
நீயும் நானும் .....
மனதிற்கு பிடித்த
மங்கையையை
மணந்து மகிழ்ச்சியாக
வாழ்வாய் என்று
எண்ணுகிறேன் .....
பலவருடங்கள் கடந்துவிட்டது
நாம் சந்தித்து .....
நலமுடன் வாழ
வாழ்த்தும் உன்தோழி .....