இடறிவிழுந்த காதல் கண்ணீரின் பயணம்

முடிவு அறியாது செல்லும் வழி தெரியாது வழிந்தோடும் கண்ணீரே !!!
ஓடும் வழியில் என் இதயத்தை தளும்பாதே ; தவறி கூட தடவாதே ...
சிறு மழலை மொழியாய் உறங்கிடும் அவள் அழகை ரசித்திட திழைத்தாயோ???
உன் சோகமான தேடல் என் தேவதையின் சுகமான கனவுகளை கலைத்துவிடும் ...
அவள் காதல் கை நீட்டி என் இமைகளை வருடும் வரை உன் கனவுகளை களைத்து தேடலின் முடிவை நோக்கி வழிந்தோடு ...

தேடுதல் இனிதே முடிந்தது காதலில் அல்ல மற்றுமொரு கண்ணீரில்...
என் முடிவை பார்த்து நீ விடும் சிறு கண்ணீரில் !!!
என் நினைவுகள் உன்னிடம் காதலை சொல்ல ...
ஒருதலை காதலை பொழிந்த எனக்கு அடுத்த பிறவியில் உன் காதலை கட்டித்தழுவி உன் மனதில் இடம் தருவாயோ???

எழுதியவர் : கௌரிசங்கர் (28-Mar-17, 12:03 pm)
பார்வை : 341

மேலே