சுமுகமான உறவு அவசியம் மேம்பட இந்த 26 வார்த்தைகள்

⏩ இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம்.
அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள் ⏪ 👈

👉 *A - Appreciation*
⏩ மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.🤗 🙌 👏

👉 *B - Behaviour*
⏩ 😊 புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

👉 *C - Compromise*
⏩ அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்❌. மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.✅

👉 *D - Depression*
⏩ மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.😴😥

👉 *E - Ego*
⏩ மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

👉 *F - Forgive*
⏩ கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.😎

👉 *G - Genuineness*
⏩ எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.😇

👉 *H - Honesty*
⏩ தவறு செய்தால் உடனே மன்னிப்பு 🙏 🙌 கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

👉 *I - Inferiority Complex*
⏩ எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் 😨. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு 😥 மனப்பான்மையை விடுங்கள்.

👉 *J - Jealousy*
⏩ பொறாமை வேண்டவே வேண்டாம்🙌❌. அது கொண்டவனையே கொல்லும்.

👉 *K - Kindness*
⏩ இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.✅

👉 *L - Loose Talk*
⏩ சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச 🤐 வேண்டாம்.❌

👉 *M - Misunderstanding*
⏩ மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.❌

👉 *N - Neutral*
⏩ எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.❌ பேசிவிட்டு முடிவு எடுங்கள்✅. நடுநிலை தவறாதீர்கள்.

👉 *O - Over Expectation*
⏩ அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்.❌ தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.❌

👉 *P - Patience*
⏩ சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.🤗

👉 *Q - Quietness*
⏩ தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்து விடுங்கள்.

👉 *R - Roughness*
⏩ பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

👉 *S - Stubbornness*
⏩ சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

👉 *T - Twisting*
⏩ இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

👉 *U - Underestimate*
⏩ மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

👉 *V - Voluntary*
⏩ அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் 👂காது கொடுங்கள்.

👉 *W - Wound*
⏩ எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் 💔 காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

👉 *X - Xerox*
⏩ நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

👉 *Y - Yield*
⏩ முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

👉 *Z - Zero*
⏩ இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
.
👉 என்ன நான் சொல்றது.?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Mar-17, 7:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1154

மேலே