என்னவாயிற்று உனக்கு

பார்வையை திருப்பி கொள்கிறாய் !
அந்த பாதை வழி இப்பொழுதெல்லாம் வருவதில்லை!
அந்த பலசரக்கு கடைக்கும் வருவதில்லை !
அந்த அரசு பேருந்திலும் வருவதில்லை !
அலைபேசியும் அணைந்து கிடக்கிறது !
சட்டென்று ஜன்னலை சாத்திக்கொள்கிறாய் !
வாசலில் கோலமிட வருவதில்லை !
தோழிகளை சந்திப்பதை குறைத்துக்கொண்டாய் !
என்னவாயிற்று உனக்கு ?
நேற்று உன் தம்பியிடம் கேட்டேன் வீட்டில் எதுவும் விசேஷமா என்று !
அக்காவை பெண்பார்த்துவிட்டு போனார்கள்
மாப்பிள்ளைக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்
ஐப்பசியில் கல்யாணம் என்று !