ஒரு கவிதையின் பூரிப்பு
என்ன ஓர் ஆச்சரியம் !!!!
ஒரு கவிதைக்கு இன்னொரு
கவிதையுடன் சந்திப்பு !
உன் எழுத்துக்கள் என்னை விட
என் கவியை
ஆனந்தத்தின் ஆழத்திற்கு
அழைத்து சென்றிருக்கிறது ...
உன்னால் வாயடைத்து நிற்கிறது
என்னை வர்ணிக்க துடிக்கும் பேனா!
விழிநீரில் விளையாடி கொண்டிருக்கிறது
என்னை சித்தரிப்பவளின் விழிகள் !
எழுத்துக்களோ வியந்து நிற்கிறது
என்னை அணைக்க....
காரணம் என்னவென்று அறிய
காத்திருக்கும் இக்கவிக்கு
அவள் சொன்னாள் ??
" உன்னால் எனக்கு கிடைத்த
வாழ்த்துக்களே அதிகம்
உனக்கென கிடைத்த
இந்த வரவேற்பில்
நெகிழ்ந்து நிற்கிறது என் பிம்பம்
அதை என்றுமே மறவாது என் மனம் !!!
வாழ்த்துக்களுக்கு
நன்றி தோழி .....