அழகிய திருடி
திருடுகொடுத்த என் இதயத்தை தேடி காதலின் காவியம் ...
நாணமே நாணல் கொள்ளும் நாணல்கள் கொண்ட நாணல்மிகு திருடியே.....
படைத்த பிரம்மனே இதயத்தை திருடு கொடுக்க முயல்கிறான் உன்னிடம் ...
இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன !!!
உன் காதலை திருட நினைத்த நொடிகளில் மீண்டும் ஒரு முறை என்னை இழக்கிறேன் சுய நினைவின்றி உன் வசியமிகு இதழ் ஓர சிரிப்பினில் ...
வண்ணங்கள் நிறைந்த வானவில் கூட தோற்கும் உன் விழியின் கருநிற அலைகளில் ....
திருடல் கூட அழகு தான் நீ என் செல்வமாகிய உன் காதல் கவிகளை கவரும் நொடிகளில் ...