எழுவேன்

கனவுகளை சுமந்த கண்களோடு ,
சாதிக்க துடிக்கும் மனதோடு,
இளமையின் துள்ளலோடு,
வறுமையின் நிழலோடு,
விடிவை நோக்கி துணிந்து முயன்ற முயற்சிகள் தோல்விகளை தழுவ ...
தோள்களில் சுமைகொண்டது தோல்விகளின் சாடல் ...
காலம் கடந்தோட கனவுகள் புதைந்தோட ...
வழியும் கண்ணீரிலும் கனவுகளின் பிரதிபலிப்பு ...
கடந்த பாதைகள் நினைவூட்ட - துணித்தெழுந்தேன் தோல்விகளை துடைத்து ..
எழுந்த நொடியில் துரோகங்கள் கை தூக்க தளர்ந்தது வலிமை ...
வலிமைகளை தகர்த்து எழுந்த மறுமுனையில் வறுமை சூழ ,
மறைந்தோடியது கனவுகள்... பசியின் நெருடலில்...
வலிகளை சுமந்து மீண்டும் எழுவேன் என் ஏக்கம் தீர - சுட்டெரிக்கும் சூரியனாய் எதிர்வரும் தடைகளை தகர்த்து சாதனை புரிய ....

எழுதியவர் : கௌரிசங்கர் (29-Mar-17, 5:42 pm)
Tanglish : ezhuven
பார்வை : 474

சிறந்த கவிதைகள்

மேலே