பெண்மை சுமைதாங்கி
உழைக்கின்ற பெண்மைக்கும் நிகராக
உலகினிலே வேறொருவர் யாருண்டு !
தழைக்கின்ற நல்லறமும் இவர்களினால்
தரணியிலே மழைநீரும் பெய்திடுமே !!!
கடலலையும் அமைதியாகும் நொடிப்பொழுதில்
காரிகையாம் சுமக்கின்றாள் தடுப்பாக !
படகில்லாத் துடுப்பாகி நின்றிடுமே !
பார்த்ததுமே புரிந்துவிடும் இவளுழைப்பும் !!
கரையாகித் தள்ளாடும் இவள்முன்னே
காவியமும் ஒன்றுமிலாச் செப்பேடே !
திரைமறைவில் இன்றில்லை பெண்டிருமே !
திக்கெல்லாம் நிறைவார்கள் சுமைதாங்கி !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்