புளிக்கும் தேன்
=======================
=======================
நீண்டு வளர்ந்த
தென்னையின் உச்சியில்
கூடுகட்டி குடும்பம் நடத்தும்
கிளிகளின் முட்டைகுடிக்க முடியா
சாரைப்பாம்பின் ஏக்கமாய்
எட்டாத கிளைதொங்கும்
தேன்குடிக்கும் ஆசை.
சிறகுகளிருந்தும்
திருடித்த்தின்னும் பழக்கமற்ற
கிளிகளோ தேனியோ
ஒன்றினையொன்று எதிர்பாராமல்
வாழ்கின்ற வாழ்வியலின் அழகை
கோடரிகொண்டு சாய்த்துவிடும்
திறமையிருக்கும் கரங்களுக்கு
பாம்புகள் முத்தம்கொடுப்பதில்லை
என்றானபிறகு மரங்களில்
ஏறுவதில் அர்த்தமில்லாமல் போகின்ற
ஆசைகளின் தேன் புளிக்கவும் செய்கிறது
*மெய்யன் நடராஜ்