மனையாள் வேண்டும்

அன்பைத் தருபவள் அமுதைப் பொழிபவள்
அமைதி செழிக்க அனுதினம் உழைப்பவள்
பிணி வந்தாலும் பேரிடர் வதைத்தாலும்
துணைவன் துயர்போக்க தூணாய் நிற்பவள்
இருப்பதைக் கொண்டு இன்புற வாழ்பவள்
கொண்டைக்கு ஏற்பவே கோரி முடிபவள்
மனையில் வேண்டும் மனைவியாய் வேண்டும்
வாழ்வு முழுக்க வசந்தம் வேண்டும்
ஆக்கம்
அஷ்ரப் அலி