வாழ்க்கை

வாழ்க்கை. . . . .
ஓர் புத்தம் புதிய கோளாய்
உனக்கு நீ அறிமுகமாகாதவரை!
வாழ்க்கை. . . .
ஓர் அச்சிடாக் காகிதம்
உன் வரலாற்றை
அது சுமக்காத வரை!
வாழ்க்கை...
ஓர் திக்கறியா பயணம்
லட்சிய துடுப்பை
கையில் நீ எடுக்காதவரை!
வாழ்க்கை....
ஓர் புதை குழி
உன் பயணம்
நேர்வழி செல்லாதவரை!
வாழ்க்கை.....
ஓர் மூடிய அகராதி
அதன் புதிய அர்த்தமாய்
நீ மாறாதவரை!
வாழ்க்கை...
ஓர் இருட்டறை
அறிவு விளக்கை
நீ தூண்டாத வரை!
வாழ்க்கை...
ஓர் தீ சுவாலை
தீய எண்ணங்களை
நீ பொசுக்காதவரை!
வாழ்க்கை....
ஓர் பாலைவனம்
பசுமை கனவுகளை
நீ விதைக்காத வரை!
வாழ்க்கை...
ஓர் புரியாத புதிர்
அதன் இரகசிய முடிச்சுகளை
நீ அவிழ்க்காத வரை!...!.....!..........